அசோர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசோர்ஸ் () என்பது போர்ச்சுகல் தேசத்திற்கு மேற்கே 800 மைல் தொலைவில் அட்லாண்டிக் சமுத்திரத்திலுள்ள 9 தீவுகளும் சில குன்றுகளும் சேர்ந்த பகுதியின் பெயர். இத்தீவுகளைப் போர்ச்சுகீசியர் 1432-ல் கண்டுபிடித்தனர். ஐரோப்பாவிற்கும் மத்திய அமெரிக்காவிற்கும் இடையே கப்பல், விமானப் போக்குவரத்து வழியில் இருப்பதால் இத்தீவுகளில் முக்கிய கப்பல் தங்குமிட்மும், விமானம் தங்குமிடமும் உள்ளன. நல்ல சீதோஷ்ண நிலையுள்ள தீவானாலும் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட்டு நகரங்களையே விழுங்கிவிடுவதுண்டு. உஷ்ண நீரூற்றுகளும், அழகான ஏரிகளையும் கொண்டது. அன்னாசி, வாழை, ஆரஞ்சு முதலிய பழவகைகள் ஏராளமாகப் பயிராகின்றன. செயின்ட் மைக்கேல் என்ற நகரமும் செயின்ட் மேரி என்ற நகரமும் முக்கியமானவை. மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இவ்விரு நகரங்களிலும் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோர்ஸ்&oldid=2347211" இருந்து மீள்விக்கப்பட்டது