அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்
![]() | |
வகை | அரசுக்குச் சொந்தமான கூட்டுத்தாபனம் |
---|---|
நிறுவுகை | 1926 |
நிறுவனர்(கள்) | டி. ஆர். விஜயவர்தனா |
தலைமையகம் | கொழும்பு, இலங்கை |
சேவை வழங்கும் பகுதி | இலங்கை |
முதன்மை நபர்கள் | காமினி வருசமன்[1] (தலைவர்/தலைமை நிர்வாகி) சிசிரா யாப்பா[1] (இயக்குநர்/தலையங்கம்) சன்ன கெவிடியகலா[1] (நிதி இயக்குநர்) சுமித் கொத்தலாவலா[1] (பொது மேலாளர்) சுதர்சி கேவாவசம்[1] (நிறுமச் செயலர்) |
தொழில்துறை | ஊடகம் |
உற்பத்திகள் | செய்தித்தாள்கள் |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
உரிமையாளர்கள் | இலங்கை அரசாங்கம் (87%)[2] |
பணியாளர் | 1,526 (2016)[2] |
இணையத்தளம் | www |
அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒவ் சிலோன் அல்லது லேக் ஹோம் (ஆங்கில மொழியில் : Associated Newspapers of Ceylon limited or Lake House) என்பது இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இருந்து இயங்கக்கூடிய இலங்கை அரசுக்குச் சொந்தமான செய்தித்தாள் வெளியீட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனமானது தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நாளிதழ்களை வெளியிடுகின்றது.[3]
வரலாறு
[தொகு]அசோசியேட்டட் நியூஸ் பேர்ப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் குழுமம் என அறியப்படும் இந்த நிறுவனம் இலங்கையின் மிகவும் பழமையான செய்தித்தாள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்த நிறுவனத்தை, இலங்கை சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான டி. ஆர். விஜயவர்தனா அவர்களினால் 1926 ஆம் ஆண்டு அன்று தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது.[4][5] தற்போது இந்த நிறுவனமானது டெய்லி நியூஸ், தினமினா, தினகரன் மற்றும் இரெச ஆகிய நான்கு நாளிதழ்களும், மேலும் சன்டே ஒப்சேவர், சிலுமினா மற்றும் வாரமஞ்சரி என மூன்று வாராந்திர இதழ்களைத் தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடுகின்றது. பின்னர் 1973 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட்' நிறுவனமானது இலங்கை அரசியல் சட்டம் இலக்க எண் 28 இன் சிறப்பு விதிகளின் மூலம் இந்த நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "இலங்கை தொடர்புடைய வரையறுக்கப்பட்ட செய்தித்தாள்கள் கூட்டுத்தாபனத்தின் தலைமைகள்". Lakehome. https://lakehouse.lk/our-leadership/.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Associated Newspapers of Ceylon Limited 2016 Annual Report" (PDF). இலங்கை நாடாளுமன்றம். pp. 7, 9, 12. Retrieved July 18, 2017.
- ↑ "Sri Lanka News | Dailynews.lk". Archived from the original on 2009-05-22. Retrieved 2009-09-03.
- ↑ "D.R. Wijewardene life". sri-lanka.mom-gmr.org. Retrieved 2019-03-13.
- ↑ 5.0 5.1 "D.R. Wijewardene: Trailblazer of the Lankan publishing industry". Daily News. http://www.dailynews.lk/2020/06/13/features/220619/dr-wijewardene-trailblazer-lankan-publishing-industry.