அசோக் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசோக் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் 12 டிசம்பர் 1981இல் பிறந்தவர். இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

இளமைப்பருவம்[தொகு]

நடுத்தர குடும்பத்தில் ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் ராதா ஆகியோருக்குப் பிறந்த அசோக்கின் மூத்த சகோதரர் அருண் ஆவார். இள வயதில் அசோக் மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் வளர்ந்தார். அசோக், வித்யா விஹார் பாத்திமா உயர்நிலைப்பள்ளியிலும், மும்பையின் முலுந்து பகுதியில் உள்ள வாணி வித்யாலயாவிலும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் சமூகவியல், உளவியல் மற்றும் ஹிந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார்.

தொழில்[தொகு]

தென்னிந்தியாவில் உள்ள தமிழ்த் திரைப்படங்களில் முதன்மைக் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.[1] 2007இல் வெளியான ஆர்.டி.நேசன் இயக்கிய முருகா என்ற திரைப்படம் இவரது முதல் படமாக இருந்தது. அதன் பிறகு கனகு இயக்கிய பிடிச்சிருக்கு திரைப்படம் 2008 பொங்கலுக்கு வெளியானது. இவர் லால் ஜோஸ் இயக்கிய முல்லா என்ற மலையாளப் படத்தில் ஒரு பாடலுக்கு கேமியோ செய்துள்ளார். ராஜன் மாதவ் இயக்கும் உலா திரைப்படம் தற்போது இவரது வசம் உள்ளது. இப்படத்தில் சலீம் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாகத் தோன்றுகின்றார். இவர் நடித்து 2015இல் பிரியமுடன் பிரியா என்ற பெயரில் தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிப்படம் திரில்லர் படமாக வெளிவந்தது. கனிகபுரம் சந்திப்பில் என்ற இலகுவான நகைச்சுவை, காதல் கலந்த காமெடித் திரைப்படமும், 2015இல் வெளிவந்தது. வானம் பார்த்த சீமையிலே என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் கரடுமுரடான கிராமத்து கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பயிற்சி மற்றும் பணி அனுபவம்[தொகு]

டி. எஸ். கதிர்வேல் பிள்ளை என்ற நடனக் கலைஞரின் இளைய சீடரான இவர் தன் நான்காம் வயதில் பரதநாட்டியம் பயின்றார். மேற்கத்திய நடனமான ஜாஸ் மற்றும் பாலே நடனங்களிலும் பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இவர் கன்னிங்ஹாம் ஸ்கூல் (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா) நிறுவனத்தில் நடன இயக்குநர்களிடையே பயிற்சி பெற்ற ஏஸ் நடனக்கலைஞர்களான டெரன்ஸ் லூயிஸ், ரெமோ டி'சோசா (Terence Lewis, Remo D'souza) ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இளம் வயதில், இவர் ராமானந்த சாகரின் தொலைக்காட்சித் தொடரான 'ஸ்ரீ கிருஷ்ணா'வில் பால்ய வயது கிருஷ்ணாவின் கதாப்பாத்திரத்தில் நடித்து, அதற்காக ஆப்ட்ரான் நிறுவனத்திடமிருந்து சிறந்த குழந்தை நட்சத்திர நடிகர் விருதும் பெற்றார். இத்தொடர் 1994-95இல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. மகாராஷ்டிராவின் மாநில அரசிடமிருந்து நடனத்துறையில் நிபுணத்துவம் பெற்றமைக்காக நிருத்யா மயூர் விருது பெற்றார்.

இவர் பல நாடகங்கள்/மேடை மற்றும் நடனம்/நாடகத் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மேடை இசைநாடகத் தயாரிப்புக்களான (Alyque Padamsee) அக்யூட் பதாம்சே இயக்கிய (Evita) "எவிதா", (Jean Jacques Bellot) யோன் ஜாக்ஸ் பெல்லோ இயக்கிய (Love is the Best Remedy) லவ் இஸ் பெஸ்ட் ரெமிடி", ஏக்துஜே புரொடக்சன்ஸின் ரவி மிஸ்ரா இந்தி மொழியில் இயக்கிய "கதா"வில் நடித்தது மஞ்ச், பாரதி வித்யா பவன்/ பவனின் கலா கேந்த்ரா தியேட்டர் திருவிழாவில் திரையிடப்பட்டு இவர் ஐபிடிஏ (IPTAவின்) சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றார். இவர் டெஸ்போ தியேட்டர் திருவிழாவிற்கு "க்ரிப்டிக் டெத்" (Cryptic Death) என்ற நாடகத்தையும் இயக்குகிறார். நடிகராவதற்கு முன்னரே ஆஷா போன்ஸ்லே, சோனு நிகம் மற்றும் ஆமிர் கான் (பிரிட்டானியா லகான் போட்டி நிகழ்வுக்கு) போன்ற பாலிவுட் பிரபலங்களுடன் பல மேடை நடன நிகழ்ச்சிகளை இயக்கி இருக்கிறார். ராஜு கானுடன் இணைந்து பல பாலிவுட் திரைப்படங்களுக்கு துணை நடனக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு ஆல்பத்திலும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடனமாடியுள்ளார். 9/11 அன்று நிகழ்ந்த (WTC) உலக வர்த்தக மையத் தாக்குதல்களின் பின் நடைபெற்ற சமாதான கச்சேரி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்தியா முழுவதும் பல்வேறு மேடைக் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் பல நடன நிகழ்ச்சிகளிலும், மேடை நாடகங்களிலும், திரையரங்கு காட்சிகளிலும் நடித்துள்ளார். இதற்கென ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல இந்திய-ஜெர்மன் மற்றும் இந்திய-பிரான்ஸ் நடனங்களிலும், மேடை நாடக நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார். அவ்வகையில் பல விருதுகளையும் கௌரவங்களையும் வென்றுள்ளார். மும்பையில் உள்ள கிஷோர் நமித் கபூர் நடிப்பு நிறுவனத்தில் முறையான நடிப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார். சினிமாவில் நடிப்பதற்கென ஸ்டண்ட், சண்டை மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவுகளிலும் இவர் பயிற்சி பெற்றுள்ளார்.

திரைப்படங்களில் பங்களிப்பு[தொகு]

வருடம் படம் பாத்திரம் மொழி குறிப்பு
2007 முருகா [2] முருகன் தமிழ் அறிமுகம்
2008 பிடிச்சிருக்கு [3] வேலு தமிழ்
2008 முல்லா [4] மலையாளம் கெளரவத் தோற்றம்
2010 ப்ரேமிஸ்தவா தெலுங்கு
2012 கோழி கூவுது [5] குமரேசன் தமிழ்
2013 வெட்கத்தைக் கேட்டால் என்னத் தருவாய் சிவா தமிழ்
2013 எல செப்பனு தெலுங்கு
2014 காதல் சொல்ல ஆசை [6] மகேஷ் தமிழ்
2014 உலா சலீம் தமிழ் திரையிடப்பட உள்ளது
2014 திகில் [7] தமிழ்
2014 ஹோம் ஸ்டே [8] கன்னடம், ஹிந்தி
2016 கனிகபுரம் சந்திப்பில் அசோக் தமிழ் படப்பிடிப்பில் உள்ளது
2016 வானம் பார்த்த சீமையிலே கருப்பன் தமிழ்
2016 பிரியமுடன் ப்ரியா [9] தமிழ் படப்பிடிப்பில் உள்ளது
2016 கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் தமிழ் கெளரவத் தோற்றம்
2016 காக்கி [10] கார்த்திக் தெலுங்கு

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_(நடிகர்)&oldid=3259467" இருந்து மீள்விக்கப்பட்டது