அசோக் மித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசோக் மித்ரா
பிறப்பு10 ஏப்ரல் 1928
டாக்கா
இறப்பு1 மே 2018 (அகவை 90)
படித்த இடங்கள்
பணிபொருளியலாளர்கள்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது

அசோக் மித்ரா (10, ஏப்பிரல்,1928-1 மே 2018[1]) என்பவர் மார்க்சியப் பொருளியலாளர், அரசியலாளர், கட்டுரையாளர், நூலாசிரியர் எனப் பன்முக ஆளுமைகள் கொண்டவர். மேற்குவங்க மாநில அரசில் நிதி அமைச்சராகவும் நடுவணரசின் பொருளியல் முதன்மை ஆலோசகராகவும் பணி செய்தவர்.

இளமையும் கல்வியும்[தொகு]

அசோக் மித்ராவின் இளமைப் பருவம் கீழை வங்கத்தின் தாக்கா என்னும் ஊரில் கழிந்தது. இளங்கலைப் பட்டத்தை தாக்கா பல்கலைக் கழகத்திலும் முதுகலைப் பட்டத்தை பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1953 ஆம் ஆண்டில் பேராசிரியர் சான் டின்பர்சன் என்பவரின் வழிகாட்டலில் பொருளியல் ஆய்வுப் பட்டம் இவருக்குக் கிடைத்தது.

பணிகள்[தொகு]

1950 களில் தில்லிப் பொருளியல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். லக்னோ பல்கலைக் கழகத்தில் ஈராண்டுகள் பொருளியல் விரிவுரையாளராகப் பணி செய்தார். 1960 களில் வாசிங்டனில் பொருளியல் வளர்ச்சி நிறுவனத்தில் கற்பிக்கும் பணியில் பதவி வகித்தார். பாங்காக்கில் ஐக்கிய நாட்டுப் பொருளியல் குழுவில் ஆசிரியப் பணி ஆற்றினார். 1977-87 மேற்கு வங்க அரசின் நிதி அமைச்சராக இருந்தார். அப்போதைய முதலமைச்சர் ஜோதி பாசுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமைச்சர் பதவியைத் துறந்தார். உலக வங்கியில் பணி, பின்னர் கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பேராசிரியராகவும் பொறுப்பேற்றார். 1990 இல் இந்திய மாநிலங்கள் அவையில் உறுப்பினராகவும் பாராளுமன்ற நிலைக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

எழுத்துப்பணி[தொகு]

தி டெலிகிராப், பொருளியல் அரசியல் வார இதழ் போன்ற பத்திரிக்கைகளில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வந்தார். சே குவேராவை இவர் நேரில் சந்தித்த நிகழ்வை இவர் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வாக இவர் கருதுகிறார்.

எழுதிய நூல்களில் சில[தொகு]

 • Calcutta Diary (1977)
 • The Nowhere Nation (2011)
 • Terms of Trade and Class Relations (1977)
 • Cutting Corners (2004)
 • The Protest is stiil on (2007)
 • From the Ramparts (2006)
 • The Starkness of it (2008)
 • The Hoodlum years (1979)
 • A Prattlers Tale
 • Apila-Capila (2003)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Ashok Mitra bereaved". The Hindu. 3 May 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/Ashok-Mitra-bereaved/article15215267.ece. பார்த்த நாள்: 2018-01-29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_மித்ரா&oldid=3230927" இருந்து மீள்விக்கப்பட்டது