அசோக் குமார் சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் குமார் சர்க்கார்
Ashok Kumar Sarkar
தேசியம்இந்தியா இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்இசுக்காட்டிசு பேராலாய கல்லூரி, கொல்கத்தா
செயற்பாட்டுக்
காலம்
1958-1983
பெற்றோர்
  • பிரபுல்ல குமார் சர்க்கார் (தந்தை)
  • நிர்சாரினி சர்க்கார் (தாய்)
வாழ்க்கைத்
துணை
அலோக்கா சர்க்கார்
பிள்ளைகள்
  • அவீக் சர்க்கார்
  • அருப் குமார் சர்க்கார்
  • அதிப் குமார் சர்க்கார்
  • அசானி சர்க்கார்
  • சர்பானி ராத்து

அசோக் குமார் சர்க்கார் (Ashok Kumar Sarkar) வங்காள மொழியில் வெளிவரும் ஆனந்த பசார் பத்திரிகா என்ற தினசரி பத்திரிகையின் மூத்த ஆசிரியராகவும், ஆனந்த பசார் பத்திரிகா குழுமத்தின் உரிமையாளரும் ஆவார்.[1] 1912 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இவர் பிறந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அசோக் குமார் சர்க்கார் ஒரு வங்காளி இந்து குடும்பத்தில் பிரபுல்லா குமார் சர்க்கார் மற்றும் நிர்சாரினி சர்க்கார் தம்பதியருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இசுகாட்டிசு பேராலயக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[2] 1957 ஆம் ஆண்டு அசோக் குமார் தேசு இலக்கியப் பத்திரிகையில் ஆசிரியராகவும் ஆனந்த பசார் பத்திரிகா குழுமத்தின் இயக்குனராகவும் பொறுப்பேற்றார். 1958 ஆம் ஆண்டு பிரபுல்லா குமார் சர்க்கார் இறந்தவுடன் இவர் ஆனந்தபசார் பத்ரிகாவின் இரண்டாவது தலைமை ஆசிரியரானார். செய்தித்தாள்களில் ஆஃப்செட் எனப்படும் மாற்று அச்சு முறையை முதலில் தொடங்கியவர்களில் இவரும் ஒருவராவார். 1778 ஆம் ஆண்டு நதானியேல் பிராசி ஆல்கெட்டு என்பவர் முதல் வங்காள இலக்கணத்தை வெளியிட்ட 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு 1978 ஆம் ஆண்டில் வங்காள அச்சிடுதல் குறித்த ஒரு கண்காட்சியை அசோக் குமார் சர்க்கார் ஏற்பாடு செய்தார்.

1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி அசோக் குமார் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. red ink printing, Ananda Bazar Patrika Uniqueness. "Ananda Bazar Patrika Uniqueness" (PDF). Pabitra Kumar Mukherji. Archived from the original (PDF) on 11 June 2012. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.
  2. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008. page 588

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_குமார்_சர்க்கார்&oldid=3160071" இலிருந்து மீள்விக்கப்பட்டது