அசோகத் தூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சாரநாத்தில் மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில், அசோகச் சக்கரவர்த்தி ஓர் உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் சிங்கங்களும் மற்ற உருவங்களும் அமைந்துள்ளன. கம்பீரமாக நிற்கும் நான்கு சிங்கங்கள், அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம், ஒரு பக்கம் காளை, மறுபக்கம் குதிரையின் உருவங்களை கொண்டது அசோகத் தூண். முண்டக உபநிடதம்| முண்டக உபநிடத்திலிருந்து]] எடுக்கப்பட்ட, “வாய்மையே வெல்லும்” என்னும் பொருள்படும், ஸத்யமேவ ஜயதே என்ற சமக்கிருத வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

அசோகரின் தூண்களின் நுனிப்பகுதிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன ;

1.மணிப்போதிகை

2.உச்சிப்பரப்பு.

3.விலங்குருவங்கள்.

விலங்குருவங்களாவன யானை, குதிரை, சிங்கம், எருது. [இவை திசைகளை காட்டுகின்றன]

யானை; புத்தரின் பிறப்பு
எருது;  பிள்ளைப்பருவம் 
குதிரை; முற்றும் துறந்து செல்லுதல்
சிங்கம்; போதிநிலை

போன்றவற்றைக் குறிப்பதாக தொல்லியலறிஞர் வின்சன்ஸ்மித் கூறுகிறார்.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகத்_தூண்&oldid=1596837" இருந்து மீள்விக்கப்பட்டது