அசைவுப் பார்வையின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசைவுப் பார்வையின்மையால் ஏற்படும் குறைபாட்டை விளக்கும் அசைவுப் படம். இயல்பு நிலையில் அசைபடமாகத் தோற்றமளிக்கும் குதிரை, அசைவுப் பார்வையின்மையில் படிமங்களாகக் காட்சியளிக்கின்றது.
அசைவுப் பார்வையின்மையால் ஏற்படும் குறைபாட்டை விளக்கும் அசைவுப் படம். இயல்பு நிலையில் அசைபடமாகத் தோற்றமளிக்கும் குதிரை, அசைவுப் பார்வையின்மையில் படிமங்களாகக் காட்சியளிக்கின்றது.

அசைவுப் பார்வையின்மை அல்லது அசைவுக் குருட்டுத்தன்மை (Akinetopsia; motion blindness)[1] என்பது மிகவும் அரிதான நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும். இதில் ஒரு பொருளின் அசைவை நோயாளியால் நோக்க இயலாது. ஒவ்வொரு கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் தோன்றுபவற்றைப் படிமங்களை நோக்குவது போன்று அசைவுப் பார்வையின்மைக் குறைபாடு உடையோர் நோக்குவர். எனவே ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை ஒருபோதும் இவர்களால் பார்க்க முடிவதில்லை.[2][3][4]

இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி தேநீரைக் குவளையில் ஊற்றும்போது தேநீர் உறைந்துபோனதைப் போன்ற ஒரு தோற்றம் உண்டாகும், இந்நிலையில் குவளையின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் உள்ள தேநீரை நோயாளி பார்க்கின்றார். ஆனால், குவளை முழுவதும் தேநீர் நிரம்பிவிட்டதைப் பார்ப்பதற்கு தாமதம் ஏற்படுகின்றது, எனவே தேநீரை குவளையின் கொள்ளளவையும் விட மிகையாக நிரப்புவதால் குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுகின்றது. அதாவது, நோயாளி முதலில் பார்த்தது குவளையின் அரைவாசிப் பாகத்தில் உள்ள தேநீரை என்று கொண்டால், பின்னர் அவர் பார்ப்பது குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுவதை ஆகும்.

இந்நோய்க்கு இன்னமும் உகந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. S (Apr 1991). "Cerebral akinetopsia (visual motion blindness). A review.". Brain : a journal of neurology 114 (2): 811–24
  2. Dubner, R.; Zeki, S. M. (1971-12-24). "Response properties and receptive fields of cells in an anatomically defined region of the superior temporal sulcus in the monkey" (in en). Brain Research 35 (2): 528–532. doi:10.1016/0006-8993(71)90494-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-8993. பப்மெட்:5002708. https://dx.doi.org/10.1016/0006-8993%2871%2990494-X. 
  3. Zeki, S. M. (1974-02-01). "Functional organization of a visual area in the posterior bank of the superior temporal sulcus of the rhesus monkey" (in en). The Journal of Physiology 236 (3): 549–573. doi:10.1113/jphysiol.1974.sp010452. பப்மெட்:4207129. 
  4. "Neuroscience: The man who saw time stand still".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசைவுப்_பார்வையின்மை&oldid=3752054" இலிருந்து மீள்விக்கப்பட்டது