அசைல் அசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொதுவான அசைல் அசைட்டு

அசைல் அசைட்டு (Acyl azide) என்பது கார்பாக்சிலிக் அமிலங்களின் வழிப்பொருள். இவற்றின் பொது மூலக்கூறு வாய்பாடு RCON3. ஆகும்.

தயாரிப்பு[தொகு]

ஆல்கைல் அல்லது அரைல் அசைல் குளோரைடுகள் சோடியம் அசைட்டுடன் வினைபுரிந்து அசைல் அசைட்டுகளைக் கொடுக்கிறது[1][2].

Preparation of acyl azides from acyl chlorides.png

கார்பாக்சிலிக் அமிலங்கள் மற்றும் சோடியம் அசைட்டை முப்பீனைல்பொசுபீன் முன்னிலையில் முக்குளோரோவசிட்டோநைட்ரைல் வினையூக்கியின் உதவியுடம் தொகுப்பு வினைக்கு உட்படுத்தினால் மிதமான நிபந்தனைகளுக்கு உட்பட்டே அதிக அளவில் அசைல் அசைட்டு தயாரிக்க முடியும்.

சோடியம் அசைட்டு மற்றும் அசிட்டோநைட்ரைலில் உள்ள அயோடின் ஒற்றை குளோரைடு சேர்த்து அதனால் உண்டாகும் அயோடின் அசைட்டு முதலில் தயாரித்துக் கொள்ளப்படுகிரது. பின்னர் அலிபாட்டிக் மற்றும் அரோமாட்டிக் ஆல்டிகைடுடன் அயோடின் அசைட்டை சேர்த்து மற்றொரு முறையிலும் அசைல் அசைட்டைத் தயாரிக்கலாம்[3][4].

பயன்கள்[தொகு]

அசைல் அசைட்டுகள் வேதியியல் வினையூக்கிகளாக பயன்படுகின்றன. கர்டியசு மறுசீராக்கல் வினையில் அசைல் அசைட்டு சமசயனேட்டுகளைத் தருகின்றன[5][6][7][8]

Curtius Rearrangement Scheme.png

தாராசுகை சிதைவு வினையிலும் அசைல் அசைட்டுகள் உருவாகின்றன[9][10][11][12][13].

Darapsky degradation

மேற்கோள்கள்[தொகு]

 1. C. F. H. Allen and Alan Bell. "Undecyl isocyanate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0846. ; Collective Volume, 3, p. 846
 2. Jon Munch-Petersen (1963). "m-Nitrobenzazide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv4p0715. ; Collective Volume, 4, p. 715
 3. Jang, Doo; Kim, Joong-Gon (2008). "Direct Synthesis of Acyl Azides from Carboxylic Acids by the Combination of Trichloroacetonitrile, Triphenylphosphine and Sodium Azide". Synlett. doi:10.1055/s-2008-1077979. 
 4. Marinescu, Lavinia; Thinggaard, Jacob; Thomsen, Ib B.; Bols, Mikael (2003). "Radical Azidonation of Aldehydes". The Journal of Organic Chemistry 68 (24): 9453–5. doi:10.1021/jo035163v. பப்மெட்:14629171. 
 5. Curtius, T. (1890). Ber. 23: 3023. 
 6. Curtius, Th. (1894). "20. Hydrazide und Azide organischer Säuren I. Abhandlung". Journal für Praktische Chemie 50: 275. doi:10.1002/prac.18940500125. 
 7. Smith, P. A. S. (1946). Org. React. 3: 337–449. 
 8. Scriven, Eric F. V.; Turnbull, Kenneth (1988). "Azides: Their preparation and synthetic uses". Chemical Reviews 88 (2): 297. doi:10.1021/cr00084a001. 
 9. A. Darapsky (1936). "Darstellung von ?-Aminosäuren aus Alkyl-cyanessigsäuren". J. Prakt. Chem. 146 (8–12): 250. doi:10.1002/prac.19361460806. 
 10. A. Darapsky; D. Hillers (1915). "Über das Hydrazid der Cyanessigsäure, Isonitrosocyanessigsäure und Nitrocyanessigsäure". J. Prakt. Chem. 92: 297. doi:10.1002/prac.19150920117. 
 11. P. E. Gagnon; P. A. Boivin; H. M. Craig (1951). "Synthesis of Amino Acids from Substituted Cyanoacetic Esters". Can. J. Chem. 29: 70. doi:10.1139/v51-009. 
 12. E. H. Rodd (1965). Chemistry of Carbon Compounds (2nd ). New York. பக். 1157. 
 13. Gagnon, Paul E.; Nadeau, Guy; Côté, Raymond (1952). "Synthesis of α-Amino Acids from Ethyl Cyanoacetate". Can. J. Chem. 30 (8): 592. doi:10.1139/v52-071. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசைல்_அசைட்டு&oldid=2746710" இருந்து மீள்விக்கப்பட்டது