உள்ளடக்கத்துக்குச் செல்

அசெரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசெரா
அசேரா பெண் தெய்வத்தின் சிற்பம், இஸ்ரேல்
அதிபதிகடல் மற்று பகல் நேர பெண் கடவுள் அசெரா[1]
வேறு பெயர்கள்அதிராத்
துணை
குழந்தைகள்

அசெரா (Asherah)[2] பண்டைய அண்மைக் கிழக்கின் லெவண்ட் பகுதிகளில் வழிபட்ட பெண் கடவுள்களில் ஒருவர். இவர் சொர்க்கத்தின் கடவுளான எல்லின் மனைவி ஆவார். இப்பெண் கடவுள் பெரும்பாலும் கருவுறுதல், தாய்மை மற்றும் புனித மரங்களுடன் தொடர்புடையவர்.[3] மேலும் அசெரா கடலின் தெய்வம், அதே நேரத்தில் அவரது கணவர் "எல்" சொர்க்கத்தின் கடவுள்.[4]

அசெரா சில நேரங்களில் எலாத் என்று அழைக்கப்பட்டார். இது எல்லின் பெண்பாலுக்கு சமமாகும்.[5]அசெரா பெண் கடவுள் பேரீச்சம்பழம் போன்ற மர உருவங்களுடன் இணைந்து, கருவுறுதலுக்கு தெய்வமாக போற்றப்படுகிறார். அசெரா கடவுள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் அல்லது பாலியல் உருவங்களைக் காட்டுகிறது. அசெராவின் தாய்வழி மற்றும் பிறப்பு அடையாளத்தை வலியுறுத்துகிறது. அவளுடைய வழிபாடு அசெரா எபிரேய [விவிலியம்|விவிலியத்தில்]] அடிக்கடி குறிப்பிடப்படும் வழிபாட்டு கடவுளாகும்.[6]

அசெராவின் செல்வாக்கு இஸ்ரேல் இராச்சியம் மற்றும் யூதேயா இராச்சியம், போனீசியா, பண்டைய எகிப்து, மற்றும் அரேபியா உள்ளிட்ட பகுதிகளில் பரவி, வெவ்வேறு பெயர்களில் வணங்கப்பட்ட்து. பண்டைய இஸ்ரேலின், குண்டிலெட் அஜ்ருத் மற்றும் கிர்பெட் எல்-கோம்-ல் உள்ள கல்வெட்டு குறிப்பின்படி, அசெரா பெண் தெய்வம் யாவேயின் மனைவியாகக் கருதப்பட்டிருக்கலாம்.[7][8] மேலும் சில அறிஞர்கள் இந்த குறிப்புகள் தெய்வத்தை விட வழிபாட்டுப் பொருட்களை விவரிக்கிறது என்று வாதிடுகின்றனர். சாப்சூ, ஆத்தோர் மற்றும் கெதேஷ் போன்ற பிற தெய்வங்களுடனான ஒற்றுமைகள், அசெராவின் உருவத்தையும் பண்புகளையும் சுற்றியுள்ள கலாச்சாரங்களை பாதித்ததாகக் கூறுகிறது. அசெரா பெண் தெய்வம் கருவுறுதல் சடங்குகளுடன் இணைக்கப்பட்டிருந்தார். காலப்போக்கில் ஏக இறைவன் வழிபாட்டு முறையானது, அசெராவின் செல்வாக்கை அடக்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Binger 1997, ப. 44.
  2. "Asherah". The Columbia Electronic Encyclopedia. (2022). Columbia University Press. 
  3. Ackerman, Susan (2008). "Asherah, the West Semitic Goddess of Spinning and Weaving?". Journal of Near Eastern Studies 67 (1): 1–30. doi:10.1086/586668. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2968. https://www.jstor.org/stable/10.1086/586668. 
  4. Patai, Raphael (1965). "The Goddess Asherah". Journal of Near Eastern Studies 24 (1/2): 37–52. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2968. https://www.jstor.org/stable/543094. 
  5. Betlyon, John Wilson (1985). "The Cult of ʾAšerah/ʾĒlat at Sidon". Journal of Near Eastern Studies 44 (1): 53–56. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2968. https://www.jstor.org/stable/544370. 
  6. Wesler, Kit W. (2012). An Archaeology of Religion. University Press of America. p. 193. ISBN 978-0761858454. Archived from the original on 10 January 2022. Retrieved 3 September 2014.
  7. Dever, William G. (1984). "Asherah, Consort of Yahweh? New Evidence from Kuntillet ʿAjrûd". Bulletin of the American Schools of Oriental Research (255): 21–37. doi:10.2307/1357073. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-097X. https://www.jstor.org/stable/1357073. 
  8. Dever, William G. (2008). Did God Have a Wife?: Archaeology and Folk Religion in Ancient Israel. Wm. B. Eerdmans Publishing. pp. 166–167. ISBN 978-0-8028-6394-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசெரா&oldid=4477208" இலிருந்து மீள்விக்கப்பட்டது