அசுவா (பேரீச்சை)
| அசுவா | |
|---|---|
| பேரினம் | போனிக்சு (தாவரம்) |
| இனம் | பீனிக்சு டாக்டிலிஃபெரா |
| தோற்றம் | மதீனா, சவுதி அரேபியா |
அசுவா (அரபு மொழி اجوا) என்பது சவுதி அரேபியா நாட்டின் மதீனா நகரத்தில் பரவலாக வளர்க்கப்படும் பனை மர பேரீச்சையின் சாகுபடி ஆகும். அசுவா வட்ட வடிவமாகவும், நடுத்தர அளவிலும் கருப்பு தோலுடனும் உள்ளது.
மதீனா நகரைச் சுற்றியுள்ள அசுவா தோட்டங்கள் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன்கள் பேரிச்சை பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.[1] இருப்பினும், மதீனா நகருக்கு அசுவா பிரத்தியேகமானது அல்ல. இவை அரேபிய தீபகற்பத்திலும் சகாரா பாலைவனத்திலும் வளர்க்கப்படுகிறது.
இசுலாமிய தூதரான நபிகள் நாயகத்துடன் பாரம்பரிய தொடர்புகளைக் கொண்டிருப்பதால், ரமலான் மாதம் மற்றும் பிற இசுலாமிய மத நிகழ்வுகளில் அசுவா பெரும்பாலும் இப்தார் அன்று உட்கொள்ளப்படுகிறது.[2][3]
ஊட்டச்சத்து உள்ளடக்கம்
[தொகு]வணிக நிறுவன அசுவா பேரிச்சை பழங்களில் (100 கிராம் ஒன்றுக்கு) 350 கலோரிகள், 82.5 கிராம் கார்போவைதரேட்டுகள், 2.5 கிராம் புரதம் மற்றும் 0 கிராம் கொழுப்பு, 20 கிராம் சர்க்கரைகள், 7.5 கிராம் நார்ச்சத்து, 50 மி. கி கால்சியம், 1 மில்லி கிராம் இரும்பு, 875 மில்லி கிராம் பொட்டாசியம், 0 மில்லி கிராம் சோடியம் உள்ளது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mohammed, Yusuf (2017-04-07). "Saudi dates exports up 37%". Arab News. Retrieved 2022-04-03.
- ↑ Al-Khayri, Jameel M.; Jain, Shri Mohan; Johnson, Dennis V., eds. (2015). Date Palm Genetic Resources and Utilization. Vol. 2. Dordrecht: Springer Netherlands. ISBN 978-94-017-9706-1.
- ↑ Al-Khayri, Jameel M.; Jain, Shri Mohan; Johnson, Dennis V., eds. (2015). Date Palm Genetic Resources and Utilization. Vol. 1. Dordrecht: Springer Netherlands. ISBN 978-94-017-9693-4.
- ↑ "Ajwa Al Medina dates per 250 grams (Dry Fruit Legacy Lab Test Report)". FSSAI 2023 For Dates (Cl.2.3.47.(4). 6 September 2023. Retrieved 2 March 2024.