உள்ளடக்கத்துக்குச் செல்

அசுத்தியோ ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுத்தியோ ஆறு
River Hasdeo
Map
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்மனேந்திரகர்
கொரியா
கோர்பா மாவட்டம்
ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டம்
Cityமனேந்திரகர்
கோர்பா
சம்பா இராச்சியம்
சிறப்புக்கூறுகள்
மூலம்கைமுர் மலை (தேவ்கர் பகடி)
  அமைவுசோன்கட்டு, மனேந்திரகர், சத்தீசுகர், இந்தியா
முகத்துவாரம்சிலாதேகி (பிர்ரா)
  அமைவு
ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டம், சத்தீசுகர், இந்தியா
நீளம்333 km (207 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
  இடதுஅகிரன் ஆறு, தான் ஆறு

அசுத்தியோ ஆறு (Hasdeo River) இந்தியாவின் சத்தீசுகர், மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். மகாநதி ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறாக அசுத்தியோ ஆறு கருதப்படுகிறது. இயஞ்சுகிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள சிலதேகி (பிர்ரா) என்ற கிராமத்திற்கு அருகில் மகாநதி ஆற்றுடன் இது இணைகிறது. அசுத்தியோ பாங்கோ அணை என்று பொதுவாக அழைக்கப்படும் மினிமாதா அணை, பாங்கோ கிராமத்திற்கு அருகில் அசுத்தியோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 910.0 மீ (2,985.6 அடி) உயரத்தில், கோரியா மாவட்டத்தில் உள்ள சோன்காட்டிலிருந்து சுமார் 10.0 கி.மீ. (6.2 மைல்) தொலைவில் அசுத்தியோ ஆறு உருவாகிறது. ஆற்றின் மொத்த நீளம் 333.0 கி.மீ. (206.9 மைல்), வடிகால் பரப்பளவு 9856 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். அசுத்தியோ ஆற்றின் முக்கிய துணை நதி கெச்சு ஆறாகும். தான் ஆறு, ஊடெங்கு ஆறு, சோர்னை ஆறு, இயிங்கு ஆறு ஆகியவை இதன் துணையாறுகளாகும்.[1] இந்த நதி அசுத்தியோ அரந்து காடுகள் வழியாகப் பாய்கிறது.[2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hydrology and Water Resources of India by Sharad K. Jain, Pushpendra K. Agarwal, Vijay P. Singh
  2. "Explained: The battle over mining in Chhattisgarh's Hasdeo forest". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-29. Retrieved 2022-11-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுத்தியோ_ஆறு&oldid=4251799" இலிருந்து மீள்விக்கப்பட்டது