உள்ளடக்கத்துக்குச் செல்

அசுதோஷ் தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுதோஷ் தேவ்
பிறப்பு1803
இறப்பு1856
பணிஇசைக்கலைஞர், பூசாரி, அகராதி எழுத்தாளர்

அசுதோஷ் தேவ் (Ashutosh Deb)(1803-1856) பொதுவாக ஏ. டி. தேவ் என்று அழைக்கப்படுபவர் ஓர் இந்திய அகராதி எழுத்தாளரும், வெளியீட்டாளரும் மற்றும் இசைக்கலைஞரும் ஆவார். இவர் ஆரம்பகால வங்காள மொழி அகராதியின் தயாரிப்பாளராகவும் இருந்தார்.[1] தேவ் ஒரு சித்தார் இசைக்கலைஞராகவும் இருந்தார். மேலும் பல பிரபலமான தப்பா மற்றும் பிற பாடல்களை இயற்றினார். தேவ் ஒரு இந்து பூசாரியாகவும், வங்காளத்தில் குறிப்பிடத்தக்க கல்வியாளராகவும் இருந்தார். இவர் ஒரு வெளியீட்டாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், பி. எம். ஆர் என்ற தனது தந்தையின் வெளியீட்டு நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வந்தார். கொல்கத்தாவில் குழந்தைகள் இலக்கியத்திற்கான தேப் சாகித்ய குட்டிர் என்ற வெளியீட்டு நிறுவனத்தை தேவ் நிறுவினார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ashutosh Deb - আশুতোষ দেব Archives - Granthagara". granthagara.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-20.
  2. Gooptu, Sarvani (2021-12-09). Knowing Asia, Being Asian: Cosmopolitanism and Nationalism in Bengali Periodicals, 1860–1940 (in ஆங்கிலம்). Taylor & Francis. ISBN 978-1-000-48948-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுதோஷ்_தேவ்&oldid=4263144" இலிருந்து மீள்விக்கப்பட்டது