அசுட்டட்டோபென்சீன்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பீனைலசுட்டட்டைன் | |
| இனங்காட்டிகள் | |
| ChemSpider | 67160605 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 15242632 |
| |
| பண்புகள் | |
| C6H5At | |
| வாய்ப்பாட்டு எடை | 287.11 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அசுட்டட்டோபென்சீன் (Astatobenzene) என்பது C6H5At என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம அசுட்டட்டைன் சேர்மமாகும். இச்சேர்மம் மிகவும் அரிதான ஆலசன் தனிமமான அசுட்டட்டைன் அணுவானது ஒரு பென்சீன் வளையத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு சேர்மமாகும்.[1]
தயாரிப்பு
[தொகு]அசுட்டட்டோபென்சீனைப் பெறுவதற்கான பல தயாரிப்பு முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.[2][3][4]
அறை வெப்பநிலையில் அயோடோபென்சீன் மற்றும் அசுட்டட்டைன் அயோடைடுக்கு இடையே ஒருபடித்தான பரிமாற்றம்:
- C6H5I + AtI → C6H5At + I2
மேலும், பீனைல் ஐதரசீன் மற்றும் அசுட்டட்டைன் அயோடைச் சேர்த்து வினைபுரியச் செய்யும் தொகுப்பு முறை:
- C6H5NHNH2 + AtI + I2 → C6H5At + N2 + 3 HI
மேலும், டைபீனைல் அயோடோனியம் அசுட்டடைடைக் கொண்ட டைபீனைல் அயோடோனியம் அயோடைடின் வெப்பச் சிதைவு வினை:
- (C6H5)2IAt → C6H5At + C6H5I
பயன்கள்
[தொகு]அசுட்டட்டோபென்சீன் சேர்மம் முதன்மையாக அசுட்டட்டைன் வேதியியல் மற்றும் கதிரியக்க மருந்துப் பயன்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சிச் சூழல்களில் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு அசுட்டட்டைனின் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hirata, Saki; Mishiro, Kenji; Washiyama, Kohshin; Munekane, Masayuki; Fuchigami, Takeshi; Arano, Yasushi; Takahashi, Kazuhiro; Kinuya, Seigo et al. (23 January 2025). "In Vivo Stability Improvement of Astatobenzene Derivatives by Introducing Neighboring Substituents". Journal of Medicinal Chemistry 68 (2): 1540–1552. doi:10.1021/acs.jmedchem.4c02188. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2623. பப்மெட்:39757786. https://pubs.acs.org/doi/10.1021/acs.jmedchem.4c02188. பார்த்த நாள்: 1 September 2025.
- ↑ Samson, G.; Aten, A. H. W. (1 June 1970). "Syntheses of Astatobenzene" (in en). Radiochimica Acta 13 (4): 220–221. doi:10.1524/ract.1970.13.4.220. பன்னாட்டுத் தர தொடர் எண்:2193-3405. https://www.degruyterbrill.com/document/doi/10.1524/ract.1970.13.4.220/html?srsltid=AfmBOopDYaSiSZBfScqrkowX0r5-h5MALjDlaf0nZchsvuPLw9EzM5f9. பார்த்த நாள்: 1 September 2025.
- ↑ Advances in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. 27 May 1987. p. 58. ISBN 978-0-08-057880-4. Retrieved 1 September 2025.
- ↑ Kugler, Hans K.; Keller, Cornelius (9 March 2013). At Astatine (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 239. ISBN 978-3-662-05868-8. Retrieved 1 September 2025.
- ↑ Vásaros, L.; Berei, K.; Norseyev, Yu V. (1 June 1989). "Some Replacement and Addition Reactions of Astatine" (in en). Radiochimica Acta 47 (2–3): 119–128. doi:10.1524/ract.1989.47.23.119. பன்னாட்டுத் தர தொடர் எண்:2193-3405. https://www.degruyterbrill.com/document/doi/10.1524/ract.1989.47.23.119/pdf?licenseType=restricted. பார்த்த நாள்: 1 September 2025.
- ↑ Hagen, A. P. (17 September 2009). Inorganic Reactions and Methods, The Formation of Bonds to Halogens (Part 1) (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 426. ISBN 978-0-470-14538-8. Retrieved 1 September 2025.