உள்ளடக்கத்துக்குச் செல்

அசுகாரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுகாரிசு
பெண் புழு
மனித உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் அசுகாரிசு லம்ப்ரிகாய்ட்சு புழுவின் வாழ்க்கைச் சுழற்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
குரோமோதோரியா
வரிசை:
அசுகாரிடிடா
குடும்பம்:
பேரினம்:
அசுகாரிசு

சிற்றினம்
  • அசுகாரிசு லம்ப்ரிகாய்ட்சு லின்னேயஸ், 1758
  • அசுகாரிசு சூம் (கோசீ, 1782)

அசுகாரிசு என்பது "சிறுகுடல் உருளைப்புழுக்கள்" எனப்படும் ஒட்டுண்ணி புழுக்களின் நூற்புழு பேரின வகையாகும்.[1] இதில் ஒரு சிற்றினம், அசுகாரிசு லம்ப்ரிகாய்ட்சு, மனிதர்களைப் பாதிக்கிறது. இது அஸ்காரியோசிசு எனும் நோயை ஏற்படுத்துகிறது. மற்றொரு சிற்றினம், அசுகாரிசு சூம், பொதுவாகப் பன்றிகளைப் பாதிக்கிறது. மற்ற உருளைப்புழுவினங்கள், பாராசுகாரிசு ஈகோரம் (குதிரை உருளைப்புழு), டாக்சோகாரா, டாக்சாசுகாரிசு போன்ற நாய்களையும் பூனைகளையும் பாதிக்கின்றன.

இவற்றின் முட்டைகள் மலம், மண்ணில் இடப்படுகின்றன. முட்டைகளைக் கொண்ட தாவரங்களை உட்கொள்ளும் எந்த உயிரினத்தையும் இவை பாதிக்கின்றன.[2] அ. லம்ப்ரிகாய்டு என்பது குடலில் காணப்படும் உருளைப்புழுவாகும். இது உலகளவில் மனிதர்களுக்கு மிகவும் பொதுவான ஒட்டுண்ணிப்புழு தொற்றினை ஏற்படுத்துகிறது. இந்நோய்த்தொற்று ஊட்டச்சத்து நிலையைப் பாதிப்பதன் காரணமாக நோய்த் தன்மையை ஏற்படுத்தும்.[3] இந்நோய் அறிவாற்றல் செயல்முறைகளைப் பாதிக்கிறது.[4] குருணை போன்ற திசு எதிர்வினைகளை ஏற்படுத்தி இளம் நிலைகளுக்கு உயிரணுக்களைத் தூண்டுகிறது. இதனால் குடலடைப்பு ஏற்படுகிறது. இந்நிலை மிகவும் ஆபத்தானது.

உருவவியல்

[தொகு]
அசுகாரிசு குறுக்குவெட்டுத் தோற்றம்
அசுகாரிசு புழுவின் உணவுக்குழாய்
  • முதிர்வடைந்த புழு: உருளை வடிவம், நுரை வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறம்
  • ஆண்: சராசரி 15–30 சென்டிமீட்டர்கள் (5.9–11.8 அங்) ; பெண்ணை விட மெல்லியது
  • பெண்: சராசரி 20–35 சென்டிமீட்டர்கள் (7.9–13.8 அங்)

உடல் நீளமானது, உருளையாக இருமுனையுங்கூம்பிய வடிவத்திலானது. உடல் சுவர் மேலுறை, மேல்தோல், தசைகளால் ஆனது. பொய் உடற்குழிகாணப்படும். சுவாசம் என்பது எளிமையான பரவல் மூலம் நடைபெறுகிறது. நரம்பு மண்டலம் ஒரு நரம்பு வளையத்துடன் பல நீளமான நரம்பு வடங்களைக் கொண்டுள்ளது. பாலினப்பெருக்க முறையில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. மேலும் ஆண்கள் புழுக்கள் பெண் புழுக்களை விடச் சிறியதாக இருக்கும்.

பாதுகாப்பு

[தொகு]

அசுகாரிசு ஒட்டுண்ணி தான் வாழும் சூழலின் புறக்காரணிகளிலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கிறது. இதன் ஒரு பகுதியாக, அசுகாரிசு செரிமான, நோயெதிர்ப்பு தொடர்பான விருந்தோம்பிகளின் புரத நொதிகளின் செயல்களைக் குறிவைத்து தொடர்ச்சியான தடுப்பான்களை சுரக்கின்றன. இதில் பெப்சின், டிரிப்சின், கைமோட்ரிப்சின் / எலாசுடேசு, கேதாப்சின், மெட்டாலோகார்பாக்சி பெப்டிடேசு ஆகியவை அடங்கும். அசுகாரிசு கார்பாக்சிபெப்டிடேசு தடுப்பான் எனப்படும் நொதியை வெளியிடுவதன் மூலம் அசுகாரிசு சிற்றினங்கள் அசுகாரிசு கார்பாக்சிபெப்டிடேசு தடுப்பான்களைத் தடுக்கின்றன. இந்த நொதி அசுகாரிசு கார்பாக்சிபெப்டிடேசு தடுப்பானின் செயல் தளத்துடன் பிணைக்கிறது. விருந்தோம்பியின் மெட்டாலோகார்பாக்சி பெப்டிடேசு புரதங்களின் பிளவுகளைத் தடுக்கிறது.[5] இதேபோல், அசுகாரிசு ட்ரிப்சின் தடுப்பி (pdb 1ATA) என்ற புரதத்தை வெளியிடுவதன் மூலம் இவை டிரிப்சினைத் தடுக்கின்றன.[6]

வரலாறு

[தொகு]

அசுகாரிசு பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களில் தொற்றினை ஏற்படுத்தி வருகிறது. அசுகாரிசு முட்டைகள் தொல்லுலக மனிதக் கழிவு, பாதுகாக்கப்பட்ட மனிதக் குடலிலும் இவை காணப்பட்டன.[7]

அ. லம்ப்ரிகாய்டுசு முதலில் லும்ப்ரிகசு டெரெசு என்று அழைக்கப்பட்டு 1683-இல் எட்வர்ட் டைசனால் விரிவாக விவரிக்கப்பட்டது.[8] அசுகாரிசு பேரினமானது முதலில் 1758ஆம் ஆண்டில் கரோலசு லின்னேயசால் அசுகாரிசு லும்ப்ரிகாய்டுசு சிற்றினம் மூலமாக விவரிக்கப்பட்டது.[9] உருவவியல் ரீதியாக ஒத்த அசுகாரிசு சூம் 1782 இல் ஜோகான் ஆகசுடு எப்ரைம் கோசு என்பவரால் பன்றிகளிலிருந்து விவரிக்கப்பட்டது [9]

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • ஒட்டுண்ணிகளின் பட்டியல் (மனிதன்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Carter, Burton J. Bogitsh, Clint E. (2013). Human parasitology, Chapter 16: Intestinal nematodes (4th ed.). Amsterdam: Academic Press. p. 291. ISBN 978-0-12-415915-0. Retrieved 19 November 2015.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. "Parasites-Ascariasis". Centers for Disease Control and Prevention. Retrieved 30 May 2013.
  3. Hall, Andrew; Hewitt, Gillian; Tuffrey, Veronica; de Silva, Nilanthi (April 2008). "A review and meta-analysis of the impact of intestinal worms on child growth and nutrition". Maternal & Child Nutrition 4 (Suppl. 1): 118–236. doi:10.1111/j.1740-8709.2007.00127.x. பப்மெட்:18289159. 
  4. Jardim-Botelho, A; Raff, S; Rodrigues Rde, A; Hoffman, HJ; Diemert, DJ; Corrêa-Oliveira, R; Bethony, JM; Gazzinelli, MF (2008). "Hookworm, Ascaris lumbricoides infection and polyparasitism associated with poor cognitive performance in Brazilian schoolchildren". Tropical Medicine and International Health 13 (8): 994–1004. doi:10.1111/j.1365-3156.2008.02103.x. பப்மெட்:18627581. 
  5. Sanglas, Laura; Aviles, Francesc X.; Huber, Robert; Gomis-Rüth, F. Xavier; Arolas, Joan L. (2009). "Mammalian metallopeptidase inhibition at the defense barrier of Ascaris parasite". Proceedings of the National Academy of Sciences 106 (6): 1743–1747. doi:10.1073/pnas.0812623106. பப்மெட்:19179285. Bibcode: 2009PNAS..106.1743S. 
  6. Grasberger, Bruce L; Clore, G.Marius; Gronenborn, Angela M (1994). "High-resolution structure of Ascaris trypsin inhibitor in solution: direct evidence for a pH-induced conformational transition in the reactive site". Structure 2 (7): 669–678. doi:10.1016/s0969-2126(00)00067-8. பப்மெட்:7922043. 
  7. "Are Ascaris lumbricoides and Ascaris suum a single species?". Parasites & Vectors 5 (42): 42. 2012. doi:10.1186/1756-3305-5-42. பப்மெட்:22348306. 
  8. Despommier DD, Griffin DO, Gwadz RW, Hotez PJ, Knirsch CA (2017). Parasitic Diseases (6 ed.). Parasites Without Borders. ISBN 978-0-9978400-1-8.
  9. 9.0 9.1 "Are Ascaris lumbricoides and Ascaris suum a single species?". Parasites & Vectors 5 (42): 42. 2012. doi:10.1186/1756-3305-5-42. பப்மெட்:22348306. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுகாரிசு&oldid=4200205" இலிருந்து மீள்விக்கப்பட்டது