அசீம் திரிவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசீம் திரிவேதி
Aseem Trivedi
அசீம் திரிவேதி
பிறப்புபெப்ரவரி 17, 1987 (1987-02-17) (அகவை 36)
கான்பூர், இந்தியா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஅரசியல் கேலிச்சித்திரம், செயல்முனைப்பு
குறிப்பிடத்தக்க படைப்புகள்சமூகப்பணி
விருதுகள்கேலிச்சித்திர ஆசிரியராக துணிவு (2012)
வலைத்தளம்
www.saveyourvoice.in

அசீம் திரிவேதி (Aseem Trivedi, பிறப்பு: 1987) ஓர் இந்திய அரசியல் கேலிச்சித்திரக்காரரும் செயல் முனைப்பாளரும் ஆவார். ஊழலுக்கு எதிராக ஊழலுக்கெதிரான கேலிச் சித்திரங்கள் என்ற தமது இயக்கத்தின் மூலமாக பரவலாக அறியப்பட்டார்.[1] இந்திய இணையத் தணிக்கைக்கு எதிராக குரலைக் காப்பாற்றுங்கள் என்ற இயக்கத்தை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவர்.[2] இவருக்கு கேலிச்சித்திரக்காரர்களின் உரிமைக்கான பன்னாட்டு பிணையம் (CRNI) 2012ஆம் ஆண்டுக்கான கேலிச்சித்திர ஆசிரியராக துணிவு என்ற விருதை வழங்கியுள்ளது.[3]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீம்_திரிவேதி&oldid=3758095" இருந்து மீள்விக்கப்பட்டது