உள்ளடக்கத்துக்குச் செல்

அசிரிய இனப்படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிரிய மக்கள் இனப்படுகொலை
26 மார்ச் 1915 அன்று வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிக்கை
இடம் உதுமானியப் பேரரசு
ஈரானிய குவாஜர் பேரரசு மற்றும் துருக்கியின் உதுமானியப் பேரரசு[1][2]
நாள்1914–1920
தாக்குதலுக்கு
உள்ளானோர்
அசிரிய மக்கள்
தாக்குதல்
வகை
நாடு கடத்தல், கொத்தாக கொலை செய்தல், இனப்படுகொலை முதலியன முதலியன
இறப்பு(கள்)1,50,000–3,00,000
தாக்கியோர்இளந்துருக்கியர்கள், குவாஜர் பேரரசின் குர்து மக்கள்[3]
நோக்கம்சமயச்சிறுபான்மை கத்தோலிக்க சிரியாக் கிறித்தவ அசிரிய மக்களுக்கான எதிரான வெறுப்புணர்வு

அசிரிய மக்கள் இனப்படுகொலை (Assyrian or Syriac genocide) Syriac: ܩܛܠܥܡܐ ܣܘܪܝܝܐ‎ or ܣܝܦܐ) தற்கால ஈரான் நாட்டை ஆண்ட குவாஜர் பேரரசில் வாழ்ந்த சிரியாக் கத்தோலிக்க கிறித்தவ அசிரிய மக்களை, துருக்கியின் உதுமானியப் பேரரசின் படைகள் மற்றும் குவாஜர் பேரரசின் குர்து படைகளும், முதலாம் உலகப் போருக்கு முன்னரும, பின்னரும், 1914 முதல் 1920 முடிய செய்த இனப்படுகொலைகளைக் குறிக்கும்.[1][2][4][5]

துருக்கியின் உதுமானியப் பேரரசின் இளந்துருக்கியர் இயக்கத்தின் படைகளும் மற்றும் குர்து மக்களும் ஒன்று சேர்ந்து, பண்டைய மேல் மெசொப்பொத்தேமியாவின், தற்கால தென்கிழக்கு துருக்கி மற்றும் தற்கால ஈரானின்வடகிழக்கு பகுதிகளில் வாழ்ந்த சிரியாக் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த அசிரிய மக்களை, 1914–1920 ஆண்டுகளில் பயங்கரமாக தாக்கியும், வலுக்கட்டாயமாக நாடு கடத்தியும், இனப்படுகொலையும் செய்தனர்.[4]

அனதோலிய கிரேக்க மற்றும் ஆர்மீனிய இனப்படுகொலைகள் போன்று அசிரிய இனப்படுகொலையும் நடைபெற்றது.[6]

அசிரிய இனப்படுகொலையின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை பல்வேறாக மதிப்பிடப்பட்டுள்ளது. லௌசான்னி உடன்படிக்கையின் படி, 2.75 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை அசிரிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கணக்கிடப்படுகிறது.[7] வடமேற்கு ஈரான் பகுதியில் மட்டும் 47,000 சிரியாக் கிறித்தவ அசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

2007-இல் பன்னாட்டு இனப்படுகொலை சங்கத்தின் அறிஞர்களின் மதிப்பீட்டின் படி, 1914 முதல் 1923 முடிய ஒட்டமான் பேரரசின் படைகள் கிறித்துவச் சமயச் சிறுபான்மை இனத்தவர்களான அனதோலிய கிரேக்க இனப்படுகொலை, ஆர்மீனிய இனப்படுகொலை மற்றும் அசிரிய இனப்படுகொலைகள் செய்தனர் என முடிவு செய்தனர்.[8][9]

2007-2008-இல் பன்னாட்டு இனப்படுகொலை கண்காணிப்புத் தலைவர் கிரிகோரி ஸ்டான்டோனின் கூறுகையில், அனதோலியாவின் கிரேக்க, ஆர்மீனிய இனப்படுகொலை மற்றும் அசிரிய இனப்படுகொலைகளை 90 ஆண்டுகளாக தற்கால துருக்கி அரசு (முன்னாள் உதுமானியப் பேரரசு) தொடர்ந்து மறுத்து வருவதுடன், இதுவரை இனப்படுகொலைகளுக்கு பொறுப்பு ஏற்று மன்னிப்பும் கோரவில்லை.[10]

துருக்கியின் உதுமானியப் பேரரசு மற்றும் மேல் மெசொப்பொத்தேமியாவின் குவாஜர் பேரரசில் வாழ்ந்த அசிரிய மக்கள் விழுக்காடு
  50%-க்கு மேல்
  30–40%
  20–30%
  10–20%
  5–10%

20-ஆம் நூற்றான்டில் உதுமானியப் பேரரசில் இருந்த தற்கால துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரான் பகுதிகளில் அசிரிய மக்களின் மக்கள்தொகை பத்து இலட்சமாக இருந்தது.[4] ஆய்வாளர் டேவிட் கௌன்ட், அசிரிய மக்களின் மக்கள்தொகை 6 இலட்சம் எனக்கணித்துள்ளார்.[7] மேலும் உதுமானியப் பேரரசின் லெபனானில் ஆயிரக்கணக்கான மரோனைட் கிறித்தவர்களும், சிறிய அளவில் அசிரியர்களும் இருந்னர். முதலாம் உலகப் போருக்கு முன்னரும், பின்னரும் இசுலாமிய ஒட்டமான் பேரரசில் கிறித்தவர்கள் போன்று சிரியாக் கத்தோலிக்க கிறித்தவ அசிரிய மக்களும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர்.

1840-களில் குவாஜர் பேரரசில் (தற்கால வடக்கு ஈரான்) வாழ்ந்த அசிரிய மற்றும் ஆர்மீனிய மக்களை வலுக்கட்டாயமாக இசுலாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர். மதம் மாற விரும்பாதவர்களை இனப்படுகொலை செய்தனர்.[5][4]

இறப்புக் கணக்கு[தொகு]

1915-1916-இல் துருக்கியின் தியர்பக்கிர் மாகாணத்தில் அசிரிய மற்றும் ஆர்மீனிய மக்கள்தொகை[11]
பிரிவு முதல் உலகப் போருக்கு முன்னர் கானாமல் போனவர்கள் (கொல்லப்பட்டவர்கள்) முதல் உலகப் போருக்குப் பின்னர்
ஆர்மீனியர்கள் ஆர்மீனிய அப்போஸ்தல திருச்சபையினர் 60,000 58,000 (97%) 2,000
ஆர்மீனிய கத்தோலிக்கர் 12,500 11,500 (92%) 1,000
அசிரியர்கள் சால்திய கத்தோலிக்கர்கள் 11,120 10,010 (90%) 1,110
சிரியாக் கத்தோலிக்கர்கள் 5,600 3,450 (62%) 2,150
சிரியாக் பழைமைவாத கிறித்தவர்கள் 84,725 60,725 (72%) 24,000
சீர்திருத்தத் திருச்சபையினர் 725 500 (69%) 2,150
1915-16-இல் துருக்கியின் மார்த்தின் மாகாணத்தில் அசிரியர்கள் & ஆர்மீனியர்கள்
பிரிவு முதல் உலகப் போருக்கு முன்னர் கானாமல் போனவர்கள் (அல்லது கொல்லப்பட்டவர்கள்) முதல் உலகப் போருக்கு பின்னர்
ஆர்மீனியர்கள் கத்தோலிக்கர்கள் 10,500 10,200 (97.1%) 300
அசிரியர்கள் சால்தியக் கத்தோலிக்கர்கள் 7,870 6,800 (86%) 1,070
சிரியன் கத்தோலிக்கர்கள் 3,850 700 (18%) 3,150
சிரியன் கிறித்தவ ஜோக்போபியர்கள் 51,725 29,725 (58%) 22,000
சீர்திருத்தத் திருச்சபையினர் 525 250 (48%) 275

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 Richard G. Hovannisian. The Armenian Genocide: Cultural and Ethical Legacies. pp 270-271. Transaction Publishers, 31 dec. 2011 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1412835925
 2. 2.0 2.1 Alexander Laban Hinton, Thomas La Pointe, Douglas Irvin-Erickson. Hidden Genocides: Power, Knowledge, Memory. pp 117. Rutgers University Press, 18 dec. 2013 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0813561647
 3. Hovanissian, Richard G. (2011). The Armenian Genocide: Cultural and Ethical Legacies. Transaction Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4128-3592-3.
 4. 4.0 4.1 4.2 4.3 Travis, Hannibal. Genocide in the Middle East: The Ottoman Empire, Iraq, and Sudan. Durham, NC: Carolina Academic Press, 2010, 2007, pp. 237–77, 293–294.
 5. 5.0 5.1 Khosoreva, Anahit. "The Assyrian Genocide in the Ottoman Empire and Adjacent Territories" in The Armenian Genocide: Cultural and Ethical Legacies. Ed. Richard G. Hovannisian. New Brunswick, NJ: Transaction Publishers, 2007, pp. 267–274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4128-0619-4.
 6. Schaller, Dominik J. and Zimmerer, Jürgen (2008) "Late Ottoman Genocides: The Dissolution of the Ottoman Empire and Young Turkish population and extermination policies." Journal of Genocide Research, 10:1, pp. 7–14.
 7. 7.0 7.1 David Gaunt, "The Assyrian Genocide of 1915", Assyrian Genocide Research Center, 2009
 8. Genocide Scholars Association Officially Recognizes Assyrian Greek Genocides. 16 December 2007. Retrieved 2010-02-02 பரணிடப்பட்டது சனவரி 18, 2012 at the வந்தவழி இயந்திரம்.
 9. "Notes on the Genocides of Christian Populations of the Ottoman Empire". genocidetext.net.
 10. "GPN Website > Home > GPN ISSUES > Special Issue 5, Winter 2011". genocidepreventionnow.org.
 11. Gaunt, David. Massacres, Resistance, Protectors: Muslim-Christian Relations in Eastern Anatolia during World War I. Piscataway, N.J.: Gorgias Press, 2006, p. 433.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Assyrian Genocide
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிரிய_இனப்படுகொலை&oldid=3791637" இலிருந்து மீள்விக்கப்பட்டது