அசிரா
ஹசிரா, சூரத் | |
---|---|
துறைமுக நகரம் | |
ஆள்கூறுகள்: 21°09′40″N 72°39′50″E / 21.161°N 72.664°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | சூரத் |
அரசு | |
• நிர்வாகம் | சூரத் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 168 km2 (65 sq mi) |
ஏற்றம் | 4 m (13 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,562 |
• அடர்த்தி | 33/km2 (86/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | குஜராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 394270 |
தொலைபேசி குறியீட்டெண் | 0261 |
வாகனப் பதிவு | GJ-05 |
நகரம் | சூரத் |
மாநகராட்சி | சூரத் |
ஹசிரா (Hazira), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டத்தின் தலைமையிட நகரமான சூரத் மாநகரத்தின் புறநகர் பகுதியும், துறைமுக நகரமும் ஆகும். இது சூரத் நகரத்திற்கு மேற்கில் 22 கிலோ மீட்டர் தொலைவில், தப்தி ஆற்றின் கழிமுகத்தில், அரபுக் கடற்கரையில் அமைந்துள்ளது.
ஹசிரா துறைமுக நகரத்தில் பெருந்தொழிற்சாலைகளும் மற்றும் கப்பல் சரக்குகளை கையாளுவதற்கான வசதிகளும் கொண்டது. இத்துறைமுக நகரத்தில் லார்சன் அன்ட் டூப்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கூட்டாக, இமயமலை போன்ற மலைப்பாங்கான போர்க் களங்களில் பயன்படுத்தும் 25 டன் எடை கொண்ட ஜோராவர் இலகு ரக பீரங்கி வண்டிகளை உற்பத்தி செய்கிறது.[1][2]
துறைமுகம்
[தொகு]ஹசிரா ஆழ்கடல் துறைமுகம் எஸ்ஸார் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இத்துறைமுக நகரத்தில் 2.5 மில்லியன் டன் கொள்ளவு கொண்ட திரவ வடிவ இயற்கை எரிவாயு கொள்கலன்கள் கொண்டுள்ளது.[3]இத்துறைமுகம் ஒரு மில்லியன் இரும்புக் கொள்கலன்களை கையாளும் திறன் படைத்தது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ India showcases light battle tank 'Zorawar' for high-altitude warfare
- ↑ DRDO unveils indigenous light tank Zorawar
- ↑ Nadkarni, Shirish (11 December 2008). "Developers sought for Hazira port". Lloyd's List Daily Commercial News (Informa Australia): pp. 20.