உள்ளடக்கத்துக்குச் செல்

அசிமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிமோ
அசிமோ (28 ஏப்பிரல் 2011)
உற்பத்தியாளர்ஹோண்டா
படைத்த ஆண்டு2000
வலைத்தளம்asimo.honda.com

அசிமோ என்பது ஹோண்டா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மனிதனைப்போன்ற தானியங்கிப் பொறி (Robot) ஆகும். இது 130 சென்டிமீட்டர் உயரமும் 54 கிலோகிராம் எடையும் கொண்டது. முதுகில் ஒரு பெட்டியுடன் விண்வெளி வீரரைப் போன்ற தோற்றம் கொண்டது. இது மனிதனைப்போலவே இரண்டு கால்களாலும் நடக்க வல்லது. இதன் வேகம் மணிக்கு ஆறு கிலோமீட்டர்கள் ஆகும். இது ஹோண்டாவின் ஜப்பானில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உருவாக்கப்பட்டது. ஐசாக் அசிமோவ் என்பவரின் நினைவாக இப்பெயர் வைக்கப்பட்டது.[1]

வளர்ச்சி[தொகு]

அசிமோ தானியங்கிப் பொறி
P3 model (left) compared to ASIMO

ஹோண்டா 1980 களில் மனித உருக்கொண்ட தானியங்கிப் பொறிகளை உருவாக்கத் தொடங்கியது.

சிறப்பியல்புகளும், தொழில்நுட்பமும்[தொகு]

செயல்திறன்கள்[தொகு]

இடம் பெயர்வாற்றல்[தொகு]

தாக்கமும், தொழில்நுட்பங்களும்[தொகு]

ஹோண்டாவின் வேலை அசிமோவின் 10 வது ஆண்டு நினைவாக நவம்பர் 2010 இல், ஹோண்டா "Run with ASIMO" என்ற ஒரு செயலியை ஐ-போன், ஆண்ட்ராய்டு நுண்ணறிபேசிகளுக்காக உருவாக்கப்பட்டது. அசிமோவுடன் தோற்ற நிலையில் ஒரு பந்தையம் போன்று நடந்து சென்று பயனர்கள் அதன் வளர்ச்சியைப் பற்றி கற்றுணர்ந்து கொள்வர். பின்னர் தங்களின் பந்தைய நேரத்தை ட்விட்டரிலும், முகநூலிலும் பகிர்ந்து கொள்வர்.

குறிப்புகள்[தொகு]

  1. Kupperberg, Paul (2007). Careers in robotics. New York: Rosen Pub. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1404209565.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிமோ&oldid=3607826" இலிருந்து மீள்விக்கப்பட்டது