அசிநாப்தீன்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2-டைஐதரோஅசிநாப்தைலீன் | |
வேறு பெயர்கள்
1,8-எதிலீன்நாஃப்தலீன்
பெரி-எதிலீன்நாப்தலீன் நாப்தைலீன்எதிலீன் மூவளைய[6.3.1.04,12]டோடெகாபென்டேன் மூவளைய[6.3.1.04,12]டோடெகா-1(12),4,6,8,10-பென்டேன் | |
இனங்காட்டிகள் | |
83-32-9 | |
ChEBI | CHEBI:22154 |
ChEMBL | ChEMBL1797271 |
ChemSpider | 6478 |
EC number | 201-469-6 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C19312 |
பப்கெம் | 6734 |
வே.ந.வி.ப எண் | AB1000000 |
| |
UNII | V8UT1GAC5Y |
UN number | 3077 |
பண்புகள் | |
C12H10 | |
வாய்ப்பாட்டு எடை | 154.21 g·mol−1 |
தோற்றம் | வெண்ணிறம் அல்லது வெளிர் மஞ்சள்படிகத்தூள் |
அடர்த்தி | 1.024 கி/செமீ3 |
உருகுநிலை | 93.4 °C (200.1 °F; 366.5 K) |
கொதிநிலை | 279 °C (534 °F; 552 K) |
0.4 மிகி/100 மிலி | |
எத்தனால்-இல் கரைதிறன் | சிறிதளவு |
குளோரோஃபார்ம்-இல் கரைதிறன் | சிறிதளவு |
பென்சீன்-இல் கரைதிறன் | நன்கு கரையும் |
அசிட்டிக் அமிலம்-இல் கரைதிறன் | கரையும் |
ஆவியமுக்கம் | 0.001 to 0.01 மிமீHg 68°F-இல்; 5 மிமீmHg 238.6°F-இல்[1] |
-.709·10−6 செமீ3/கிராம் | |
வெப்பவேதியியல் | |
நியம மோலார் எந்திரோப்பி S |
188.9 யூல் மோல்−1 கெல்வின்−1 |
வெப்பக் கொண்மை, C | 190.4 J mol−1 K−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1674 |
தீப்பற்றும் வெப்பநிலை | 135 °C (275 °F; 408 K) |
Autoignition
temperature |
> 450 °C (842 °F; 723 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அசிநாப்தீன் (Acenaphthene) என்பது 1 மற்றும் 8 நிலைகளை இணைக்கும் எத்திலீன் பாலத்துடன் நாப்தலீனைக் கொண்ட ஒரு பல்வளைய அரோமேட்டிக் ஐதரோகார்பன் (PAH) ஆகும். இது நிறமற்ற திண்மமாகும். நிலக்கரி தார் சுமார் 3% இந்தச் சேர்மத்தைக் கொண்டுள்ளது.
தயாரிப்பு மற்றும் வேதிவினைகள்
[தொகு]அசிநாப்தீன் முதன்முதலில் நிலக்கரித் தாரிலிருந்து மார்செலின் பெர்டெலாட் என்ற பிரெஞ்சு வேதியியலாளரால் தயாரிக்கப்பட்டது. பின்னர் பெர்தெலோட் மற்றும் பார்டி ஆகியோர் α-எத்தில்நாப்தலீன் வளையமாக்கல் வினையைக் கொண்டு இச்சேர்மத்தை தொகுப்புமுறையில் தயாரித்தனர். தொழில்துறை ரீதியாக, இது நிலக்கரித் தார் மற்றும் அதன் வழித்தோன்றலான அசிநாப்தைலீன் (மற்றும் பல சேர்மங்கள்) ஆகியவற்றிலிருந்து இன்னும் பெறப்படுகிறது.
மற்ற அரீன்களைப் போலவே, அசிநாப்தீனும் குறைந்த உலோக மையங்களைக் கொண்ட அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. ஒரு உதாரணம் (η6-அசிநாப்தீன்′ Mn (CO′3] +.[2]
பயன்பாடுகள்
[தொகு]இது நாஃப்தலீன் டைகார்பாக்சிலிக் நீரிலியைத் தயாரிக்க பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது, இது சாயங்கள் மற்றும் ஒளியியல் பொலிவூட்டிகளுக்கு முன்னோடியாகும். நாப்தலீன் டைகார்பாக்சிலிக் நீரில் என்பது பெரிலீன்டெட்ராகார்பாக்சிலிக் இருநீரிலிக்கு முன்னோடியாகும், இது பல வணிக நிறமிகள் மற்றும் சாயங்களுக்கு முன்னோடியாகும்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ National Toxicology Program, Institute of Environmental Health Sciences, National Institutes of Health (NTP). 1992. National Toxicology Program Chemical Repository Database. Research Triangle Park, North Carolina
- ↑ S. B. Kim, S. Lotz, S. Sun, Y. K. Chung, R. D. Pike, D. A. Sweigart "Manganese Tricarbonyl Transfer (MTT) Agents" Inorganic Syntheses, 2010, Vol.
- ↑ K. Hunger.
- ↑ Greene, M. "Perylene Pigments" in High Performance Pigments, 2009, Wiley-VCH, Weinheim.