உள்ளடக்கத்துக்குச் செல்

அசித் குமார் தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசித் தத்தா
অজিত দত্ত
தாய்மொழியில் பெயர்অজিত দত্ত
பிறப்பு(1907-09-23)23 செப்டம்பர் 1907
டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு30 திசம்பர் 1979(1979-12-30) (அகவை 72)
ராச்பெகாரி பெருஞ்சாலை, கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர், பதிப்பாசிரியர், வெளியீட்டாளர், பேராசிரியர்

அசித் குமார் தத்தா (Ajit Kumar Dutta) என்பவர் வங்காள மொழியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1907–1979 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த இவர் பதிப்பாசிரியர், வெளியீட்டாளர், கவிஞர் மற்றும் பேராசிரியர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். குறிப்பாக கவிதைகளுக்காக இவர் நன்கு அறியப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அசித் தத்தா, 1907 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் தேதி தாக்காவில் பிறந்தார். தந்தை அதுல்குமார் தத்தா, ஒரு துணை நீதிபதி ஆவார். தாயாரின் பெயர் ஏம்நளினி (திருமணத்திற்கு முன் குகா தாகுர்தா என அழைக்கப்பட்டார்) என்பதாகும். அசித் தத்தாவுக்கு நான்கு வயதாக இருந்தபோது, தந்தை காலமானார். ஆசக் லேனில் அமைந்திருந்த குடும்ப இல்லத்தில், தனது உடன்பிறப்புகளுடன் இணைந்து இவர் வளர்ந்தார். 14 வயதாக இருந்தபோது, ​​இவரைவிட ஒரு வயது இளையவரான புத்ததேவ் போசை இவர் சந்தித்தார்.[1]

1924 ஆம் ஆண்டில், தத்தா செகந்நாத் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். தற்போது செகந்நாத் பல்கலைக்கழகம் ஆக விளங்குகிறது . தனது 'இடைநிலை கலைப் படிப்பினை ' முடிந்த பிறகு, 1926 ஆம் ஆண்டில் இவர் கொல்கத்தாவுக்குச் சென்று, வித்யாசாகர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை சிறப்புப் படிப்பில் சேர்ந்தார். இருப்பினும், தனது மூத்த சகோதரர் காலமானதைத் தொடர்ந்து, இவர் மீண்டும் தாக்காவுக்கே திரும்பினார். அங்கு இவர் தாக்கா பல்கலைக்கழகத்தின் வங்காள மற்றும் சமசுகிருதத் துறையில் சேர்ந்தார். தத்தா தனது இளங்கலைப் பட்டத்தை 1929-ஆம் ஆண்டிலும், முதுகலைப் பட்டத்தை 1930- ஆம் ஆண்டிலும் நிறைவு செய்தார். இவ்விரு முறையும் இவர் வகுப்பிலேயே முதலிடம் பிடித்தார்.[1]

தொழில்

[தொகு]

தத்தா தனது முதல் கவிதையை 1925-ஆம் ஆண்டில் 'மானசி ஓ மர்மபானி' என்ற இதழில் வெளியிட்டார். அக்காலத்தில் பிரபலமான வங்காள இலக்கிய இதழான கல்லோல்லிலும் இவரது படைப்புகள் வெளிவந்தன.[1] He co-edited the monthly literary magazine Pragati with Bose starting in 1927.[2] 1927ஆம் ஆண்டிலிருந்து போசுடன் இணைந்து 'பிரகதி' என்ற மாதாந்திர இலக்கிய இதழைத் தொகுத்து வெளியிட்டார். தத்தாவின் முதல் கவிதைத் தொகுப்பான 'குசுமேர் மாசு ', 1930ஆம் ஆண்டில் போசின் 'பண்டீர் பந்தனா' வெளியான அதே நேரத்தில் வெளியிடப்பட்டது. அவர்கள் இருவரும் நூல்களை ஒருவருக்கொருவர் அர்ப்பணித்துக் கொண்டனர்.[1]

பட்டப்படிப்புக்குப் பிறகு, தத்தா தாக்கா பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் கற்பிக்கத் தொடங்கினார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் கல்கத்தாவுக்குத் திரும்பினார். அங்கு இவர் கொல்கத்தாவில் உள்ள சுரேந்திரநாத் பானர்ச்சியால் தொடங்கப்பட்ட ரிப்பன் கல்லூரி பள்ளியில் கற்பித்தார். 1933ஆம் ஆண்டில், உமா ராயை மணந்தார். 1936-ஆம் ஆண்டில் ரிப்பனை விட்டு வெளியேறி, தனது தாய்வழி உறவினரின் கீழ் இந்திய தேயிலைச் சந்தை விரிவாக்க வாரியத்தில் உதவி விளம்பர அதிகாரியாகச் சேர்ந்தார்.[1]

1937ஆம் ஆண்டில், போசு 202, இராச்பெகாரி பெருஞ்சாலையில் உள்ள ஒரு தரைத்தள அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் குடிபெயர்ந்தார். வங்காள மொழியில் வெளியாகும் காலாண்டு கவிதை இதழான 'கவிதா'வை வெளியிட்ட போசின் அச்சகத்தின் பெயரால், இந்தக் கட்டிடம் 'கவிதா பவன்' (கவிதை இல்லம்) என்று அழைக்கப்பட்டது.[3] தத்தா கவிதா இதழுடன் தொடர்பில் இருந்தார். மேலும் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'பாதாளகன்யா' 1938ஆம் ஆண்டில் கவிதா பவனால் வெளியிடப்பட்டது. அந்த ஆண்டு, தத்தா தனது நண்பர் போசின் வீட்டிற்கு மேலே இருந்த ஒரு குடியிருப்பில் குடியேறினார்.[1] கலாச்சார வரலாற்றாசிரியர் சுமந்தா பானர்ச்சி அந்தத் தெருவை "அறிவாளிகளின் மையப்புள்ளி" என்று விவரித்தார். சுனிதி குமார் சாட்டர்சி போன்ற பிற எழுத்தாளர்களும் பேராசிரியர்களும் அருகிலேயே வசித்து வந்தனர்.[4]

தத்தா 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேயிலை வாரியத்தை விட்டு வெளியேறி, கல்கத்தா நேசனல் வங்கியில் விளம்பர அதிகாரியானார். 1947ஆம் ஆண்டில், அவர் 'திகந்தா பப்ளிசர்சு' என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். ஒப்பிலக்கியப் பேராசிரியர் அமியா தேவின் கூற்றுப்படி, இப்பதிப்பகம் "பத்தொன்பது முக்கியமான தலைப்புகளை வெளியிட்டது". தத்தா வங்கியை விட்டு வெளியேறி, பிரசிடென்சி கொல்கொத்தா மாநில பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்லூரிகளில் மீண்டும் கற்பிக்கத் தொடங்கினார். 1956ஆம் ஆண்டில் இயாதவ்பூர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது அதில் சேர்ந்தார். 1970 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார்.[1]

தத்தா 1979 ஆம் ஆண்டு திசம்பர் 30ஆம் நாள் இறந்தார்.[1]

புத்தகங்கள்

[தொகு]
கவிதை
  • குசுமர் மாசு (1930)
  • பாடல்கன்யா (1938)
  • நாசுதச்சந்து (1945)
  • பூர்ணனாவா (1946)
  • சதர் போய் (1950)
  • சாயர் அல்பனா (1951)
  • சனாலா (1954)
  • கவிதா சம்க்ரபா (1959)
  • சிரேச்டா கவிதா (1970)
  • சதா மேக் கலோ பகாத்து (1971)
உரைநடை
  • சனந்திகா (1949)
  • மோன் பவனர் நாவ் (1950)
  • சரசு பிரபந்த (1968)
  • பங்களா சாகித்யே கசுயராசு (1960)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 8 Dev, Amiya (November–December 2006). "Ajit Dutta". Indian Literature 50 (6 (236)): 8–9.
  2. Haque, Enamul (2009). Dhaka Alias Jahangirnagar: 400 Years. Dhaka: International Centre for Study of Bengal Art. p. 315. ISBN 978-984-33-0343-1. Another quality literary monthly Pragati, edited by Buddhadev Basu (1908-1974) and Ajit Dutta (1907-1979), was published in 1927.
  3. Clifford, Pat (2008). "George Oppen, Buddhadev Bose and Translation". Jacket. Vol. 36.
  4. Banerjee, Sumanta (2016). Memoirs of Roads: Calcutta from Colonial Urbanization to Global Modernization. Oxford University Press. p. 143. ISBN 978-0-19-946810-2.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசித்_குமார்_தத்தா&oldid=4496037" இலிருந்து மீள்விக்கப்பட்டது