அசிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியா அசிதா கிராஸ்ட்டா (Maria Ashitha Crasta, 3 அக்டோபர் 1984 இல் பிறந்தவர்) ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார்.

பிறப்பும் ,இளமைப்பருவமும்[தொகு]

மரியா அசிதா கிராஸ்ட்டா என்ற இயற் பெயர் கொண்ட அசிதா மாடல் அழகி மற்றும் நடிகையும் ஆவார். இவர் லோவிஸ் மற்றும் ஜெனீஃபர் க்ராஸ்டா தம்பதியரின் மகளாவார் . மும்பையில் பிறந்த இவர் பின்னர் பெங்களூருக்கு குடி பெயர்ந்தார்.

15 வயதில் இருந்து அவர் நடனம் மற்றும் வடிவழகு நிகழ்ச்சிகளில் பிராந்திய மட்டத்தில் பங்குபெற்றார், மேலும் அவரது திறமைக்காக பல பரிசுகளையும் பெற்றார். - அசிதா மவுண்ட் கார்மெல் நிர்வாக துறை கல்லூரியில் படித்து நிர்வாக இயலில் முதுகலைப் பட்டத்தை பெற்றார்.

அழகிப்போட்டியில் மேன்மை[தொகு]

பதினாறாம் வயதில் அசிதா தனது முதல் அழகி போட்டியில் வெற்றி பெற்றார். உடனடியாக அவர் பல பிராண்டுகளின் மேம்பாட்டுக்காக வடிவழகு செய்தார் . 'மிஸ் ப்ளாசம் 1998' மற்றும் ' மிஸ் எசோடிகா 1999' என்ற இரு அழகிப்போட்டியில் மாநில அளவில் வென்றார் பின்னர் 'மிஸ் மில்லினியம் - 2000' பட்டத்தை வென்று , கன்னட திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார்.[1]

திரை உலக பிரவேசம்[தொகு]

கன்னட படவுலகம் அவ்வளவாக இவருக்கு கை கொடுக்கவில்லை .அதிக பட்சமாக கதாநாயகன் தங்கை வேடமே கிடைத்தது . ஹார்ட் பீட்ஸ், கிரீன் சிக்னல் ,ஹாட்ஸ் ஆப் இந்தியா ,தவறினா சிறி ,ரோடு ரோமியோ ,ஆகாஷ் ,தேவரு கோட்ட தங்கி ஆகிய சிவராஜ்குமார், புனித் ராஜகுமார்படங்களில் நடித்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

தொழில்முறை வாழ்க்கையில் சின்னத்திரையிலும் தோன்றினார் ஒரு பெரிய இடைவெளிக்கு பின் திருமணம் செய்து திரைவாழ்வை விட்டு விலக முடிவு செய்தார் . அசிதா அக்டோபர் 21 ம் தேதி தொழிலதிபர் ஷங்கரை திருமணம் புரிந்தார் . அசிதாவும் ,சங்கரும் சுமார் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் .இந்த திருமணம் இந்து -கிறிஸ்துவ கலப்பு மணம் ஆகும் .எனவே இவர்கள் திருமணம் இரு மத மரபுகளின் படியும் நடைபெற்றது .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashita". Biography. https://www.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிதா&oldid=3843405" இலிருந்து மீள்விக்கப்பட்டது