அசிட்டோன் பெராக்சைடு
![]() Cyclic dimer and trimer examples
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
3,3-டைமெதில்-1,2-டையாக்சாசைக்ளோபுரோப்பேன் (ஒருபடி)
3,3,6,6-டெட்ராமெத்தில்-1,2,4,5-டெட்ராக்சேன்(இருபடி) 3,3,6,6,9,9-எக்சாமெத்தில்- 3,3,6,6,9,9,12,12-ஆக்டாமெத்தில்- | |||
வேறு பெயர்கள்
டிரை அசிட்டோன் டிரை பெராக்சைடு
Peroxyacetone Mother of Satan | |||
இனங்காட்டிகள் | |||
17088-37-8 ![]() | |||
ChemSpider | 3582942 ![]() | ||
யேமல் -3D படிமங்கள் | Image
இருபடிச் சேர்மம் | ||
பப்கெம் | 4380970 | ||
SMILES
| |||
பண்புகள் | |||
C6H12O4 (dimer) C9H18O6 (trimer) C12H24O8 (tetramer) | |||
வாய்ப்பாட்டு எடை | 148.157 கி/மோல் (dimer) 222.24 கி/மோல் (முப்படிச் சேர்மம்) | ||
தோற்றம் | வெண்ணிறப் படிகத் திண்மம் | ||
உருகுநிலை | 131.5 முதல் 133 °செல்சியசு (இருபடிச்சேர்மம்)[1] 91 °செல்சியசு (முப்படிச்சேர்மம்) | ||
கொதிநிலை | 97 முதல் 160 °C (207 முதல் 320 °F; 370 முதல் 433 K) | ||
கரையாது | |||
தீங்குகள் | |||
GHS pictograms | வார்ப்புரு:GHS01 ![]() | ||
Explosive data | |||
Shock sensitivity | High/High when wet | ||
Friction sensitivity | High/moderate when wet | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
அசிட்டோன் பெராக்சைடு (Acetone peroxide or APEX ) ஒரு கரிம பெராக்சைடு மற்றும் முதனிலை உயர் வெடிபொருள் ஆகும். நேரியல் ஒற்றைப்படி மற்றும் வளைய இருபடிச்சேர்மம், முப்படிச் சேர்மம் மற்றும் நான்குபடிச் சேர்மம் வடிவங்களின் கலவையை வழங்க அசிட்டோன் மற்றும் ஐதரசன் பேரொட்சைடின் வினையால் இது தயாரிக்கப்படுகிறது. முப்படிச் சேர்மமானது மூவசிட்டோன் முப்பெராக்சைடு (டிஏடிபி ) அல்லது மூ-வளைய அசிட்டோன் பெராக்சைடு (டிசிஏபி) என அழைக்கப்படுகிறது. இருபடிச் சேர்மமானது டைஅசிட்டோன் மூபெராக்ஸைடு (டிஏடிபி) என்று அழைக்கப்படுகிறது. அசிட்டோன் பெராக்சைடு ஒரு வெண்ணிறப் படிகத் தூளின் வடிவத்தை ஒரு தனித்துவமான வெளுப்பாக்கியின் வாசனையையோ (தூய்மையற்றதாக இருக்கும்போது) அல்லது தூய்மையாக இருக்கும்போது ஒரு பழம் போன்ற வாசனையையோ கொண்டுள்ளது. மேலும் இது வெப்பம், உராய்வு, நிலை மின்சாரம், அடர் கந்தக அமிலம், வலுவான புற ஊதா கதிர்வீச்சு அல்லது அதிர்ச்சி இவற்றின் காரணமாக வெடிக்கக்கூடும். 2015 ஆம் ஆண்டு வரை நைட்ரஜன் அல்லாத வெடிபொருட்களைக் கண்டறிய வெடிபொருள் கண்டுபிடிப்பாளர்களால் இயலவில்லை. ஏனெனில், பெரும்பாலான வெடிபொருட்கள் நைட்ரசன் அடிப்படையிலானவை. 2001 ஆம் ஆண்டு முதல் நைட்ரசன் இல்லாத டிஏடிபி பல பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்ந்தெடுத்த வெடிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
வரலாறு[தொகு]
அசிட்டோன் பெராக்சைடு (குறிப்பாக, டிரைஅசிட்டோன் டிரைபெராக்சைடு) 1895 ஆம் ஆண்டில் ரிச்சர்டு வொல்ஃபென்ஸ்டைன் கண்டுபிடித்தார்.[2] வொல்ஃபென்ஸ்டீன் அசிட்டோன் மற்றும் ஐதரசன் பெராக்சைடு ஆகியவற்றைக் கலந்தார். பின்னர், அவர் கலவையை அறை வெப்பநிலையில் ஒரு வாரம் இருக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் சிறிய அளவு படிகங்கள் வீழ்படிவாக்கப்பட்டன. இதன் உருகுநிலை 97 °C (207 °F).[3]
1899 ஆம் ஆண்டில் அடோல்ஃப் வான் பேயர் மற்றும் விக்டர் வில்லிகர் ஆகியோர் இருபடிச் சேர்மத்தின் முதல் தொகுப்பு முறையை விவரித்தனர் மற்றும் இவர்கள் இரண்டு பெராக்சைடுகளின் தொகுப்புக்கு அமிலங்களின் பயன்பாட்டை விவரித்தனர். [4] பேயரும் வில்லிகரும் டை எத்தில் ஈதரில் உள்ள பொட்டாசியம் பெர்சல்பேட்டை அசிட்டோனுடன் இணைத்து, குளிரூட்டப்பட்ட சூழலில் தயாரித்தனர். ஈதர் அடுக்கைப் பிரித்த பிறகு, விளைபொருளானது சுத்திகரிக்கப்பட்டது. இந்தச் சேர்மம் 132 செல்சியசு முதல் 133 செல்சியசு வரையில் உருகுநிலையைக் கொண்டிருந்தது.[5] அசிட்டோன் மற்றும் ஐதரசன் பெராக்சைடு ஆகியவற்றின் குளிர்ந்த கலவையில் ஐதரோகுளோரிக் அமிலத்தை சேர்ப்பதன் மூலம் முப்படி சேர்மத்தைத் தயாரிக்க முடியும் என்று அவர்கள் கண்டறிந்தனர்.[6] சேர்மங்களின் மூலக்கூறு எடையைத் தீர்மானிக்க உறைநிலைத் தாழ்வு முறையை பயன்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்பட்டது. பொட்டாசியம் பெர்சல்பேட் வழியாக அவர்கள் தயாரித்த அசிட்டோன் பெராக்சைடின் வடிவம் ஒரு இருபடி என்றும் அவர்கள் தீர்மானித்தனர். அதேசமயம் ஐதரோகுளோரிக் அமிலம் வழியாக தயாரிக்கப்பட்ட அசிட்டோன் பெராக்சைடு வொல்ஃபென்ஸ்டீனின் கலவை போன்று ஒரு முப்படியாகும்.
இந்த முறை மற்றும் பெறப்பட்ட பல்வேறு தயாரிப்புகளின் பணிகள் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மிலாஸ் மற்றும் கோலுபோவிச் ஆகியோரால் ஆராயப்பட்டன. [7]
வேதியியல்[தொகு]
அசிட்டோன் பெராக்சைடு என்ற வேதியியல் பெயர் பொதுவாக வளைய முப்படியைக் குறிக்கப் பயன்படுகிறது. இது அமிலம் வினையூக்கியாக செயல்படுகின்ற கருக்கவர் சேர்க்கை வினையில் ஐதரசன் பெராக்சைடு மற்றும் அசிட்டோன் ஆகிய இரண்டு முன்னோடிகளுக்கு இடையிலான ஒரு வினையின் விளைபொருளாகும். [ மேற்கோள் தேவை ]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Federoff, Basil T. et al., Encyclopedia of Explosives and Related Items (Springfield, Virginia: National Technical Information Service, 1960), vol. 1, p. A41.
- ↑ See:
- ↑ (Wolffenstein, 1895), p. 2266.
- ↑ See:
- ↑ (Baeyer and Villiger, 1899), p. 3632.
- ↑ (Baeyer and Villiger, 1900), p. 859.
- ↑ "Studies in Organic Peroxides. XXVI. Organic Peroxides Derived from Acetone and Hydrogen Peroxide". Journal of the American Chemical Society 81 (24): 6461–6462. 1959. doi:10.1021/ja01533a033.