அசிட்டோனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு 1,2-அசிட்டோனைடின் பொது வாய்ப்பாடு. டையால் நீல வண்ணத்திலும் அசிட்டோன் பகுதி சிவப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளது.

கரிம வேதியியலில் அசிட்டோனைடு ( acetonide) என்பது ஒரு வேதி வினைக்குழு ஆகும். இவ்வினைக்குழுவானது டையாலுடன் கூடிய அசிட்டோனின் கீட்டாலால் ஆக்கப்பட்டுள்ளது. சமபுரொப்பைலிடின் கீட்டால் என்பது வேதிமுறைப்படியான சரியான பெயராக இருக்கும் என்று கருதப்படுகிறது. 1,2 மற்றும் 1,3 டையால்களுக்குரிய பொதுவான பாதுகாப்புக் குழுவாக இக்குழு இருக்கிறது[1] . நீர்த்த அமிலக் கரைசலால் நீராற்பகுப்பு செய்து இப்பாதுகாப்புக் குழுவை டையாலில் இருந்து நீக்க முடியும்.

புரணித்திரலனைய அசிட்டோணைடுகள் தோல் மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அதீதக் கொழுப்பு விருப்பப் பண்பினால் இவை தோலில் நன்கு ஊடுருவும் எனக் கருதப்படுகிறது[2].

  • புளுகுளோரோலோன் அசிட்டோனைடு
  • புளுவோசினோலோன் அசிட்டோனைடு
  • மூவமிசினோலோன் அசிட்டோனைடு

ஒரு பாதுகாப்புக் குழுவாக அசிட்டோனைடு பயன்படுகிறது என்பதற்கு உதாரணமாக, சிக்கலான கரிமத் தொகுப்புவினையான நிக்காலவ் டாக்சால் மொத்தத் தொகுப்பு என்ற வினையைக் கூறலாம். சர்க்கரை மற்றும் சர்க்கரை ஆல்ககால்களுக்கு இச்சேர்மம் சோல்கீட்டால் வடிவில் பொதுவானதொரு பாதுகாப்புக்குழுவாக இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kocieński, Philip j. (1994). "3.2.2: Diol Protecting Groups—Acetals—Isopropylidene Acetals". Protecting Groups. Foundations of Organic Chemistry Series. Thieme. பக். 103. 
  2. Steinhilber, D; Schubert-Zsilavecz, M; Roth, HJ (2005) (in German). Medizinische Chemie. Stuttgart: Deutscher Apotheker Verlag. பக். 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-7692-3483-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டோனைடு&oldid=2747347" இலிருந்து மீள்விக்கப்பட்டது