அசாம் பட்டு


அசாம் பட்டு (Assam silk), இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அசாம் மாநிலத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை காட்டுப் பட்டுப்புழுகளின் கூடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பட்டு நூல் ஆகும். அசாம் பட்டு நூல்கள் மூன்று வகைப்படும். அவைகள் தங்க நிறத்திலான மூகா பட்டு மற்றும் வெண்மை நிறத்திலான பாட் பட்டு மற்றும் சிவப்பு நிறத்திலான எரி பட்டு ஆகும். அசாமின் காமரூப ஊரக மாவட்டத்தில் உள்ள ரங்கியா நகரத்திற்கு அருகில் அமைந்த சுவால்குச்சி[1] சிற்றூர் அசாம் பட்டுத் துணி நெசவுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். [2][3]
வரலாறு
[தொகு]பண்டைய காலத்திலிருந்தே அசாம் பகுதியில் உயர்தர பட்டு உற்பத்திக்கு நன்கு அறியப்பட்டது. கிமு 3 ஆம் நூற்றாண்டின் அரசியல் இலக்கியமான சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம் நூலில் அசாமின் மிக நுட்பமான பட்டு ஆடைகளைப் பற்றி குறிப்பிடுகிறது. பண்டைய காமரூபப் பேரரசில் தெய்வ வழிபாட்டில் பட்டு பயன்படுத்தப்பட்டதை 10-11 ஆம் நூற்றாண்டு காலத்திய காளிகா புராணம் பதிவு செய்துள்ளது. காளிகா புராணத்தின்படி, தெய்வங்களை வழிபடும் போதும், கோவிலின் தலைமை தெய்வங்களின் சிலைகளை மூடுவதற்கும் சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பட்டுத் துணிகள் பயன்படுத்தப்பட்டது.[4][5][6] பழங்காலத்தில் மூகா பட்டு நூல்களுக்கு, (இயற்கையான) மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு சாயம் பூசப்பட்டதாக அறியப்படுகிறது.[7]
பட்டு வளர்ப்பு பற்றிய அறிவு கிமு 3000-2000 காலகட்டத்தில் சீனாவிலிருந்து வந்த திபெத்திய-பர்மிய குழுக்களிடமிருந்து அசாம் பகுதிக்கு வந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது. மேலும், சீனாவில் தொடங்கி, பர்மா மற்றும் அசாம் வழியாகச் சென்று, இறுதியாக துருக்மெனிஸ்தான் வழியாகச் செல்லும் தென்மேற்கு பட்டுப் பாதை வழியாக மற்றொரு பட்டு வர்த்தகம் இருந்தது. சீனாவின் பட்டு அசாம் வழியாக இந்தியாவிற்கு வந்தது என்பதைக் காட்ட பல்வேறு பதிவுகள், கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் எழுதிய ஹர்சசரிதம் எனும் சமஸ்கிருத நூலில், பேரரசர் ஹர்சவர்தனரின் முடிசூட்டு விழாவின் போது, ஹர்சருக்கு காமரூபப் பேரரசர் பாஸ்கரவர்மன் பல விலையுயர்ந்த பட்டுத் துணிகள் மற்றும் தங்க நகைகள் பரிசளித்தார் எனக்குறிப்பிட்டுள்ளது.[8]
கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் இந்தியாவைக் குறித்து எழுதிய பதிவுகளில் அசாம் பட்டு பற்றிய குறிப்புகள் உள்ளது. அதில் காமரூபப் பேரரசர் பாஸ்கர் வர்மனின் ஆட்சியின் போது காமரூபத்தில் பட்டு பயன்பாடு மற்றும் வர்த்தகம் குறித்து எழுதியுள்ளார். ராம் மோகன் நாத் தனது "அசாமி கலாச்சார பின்னணி" என்ற நூலில், "பண்டைய காலங்களில் திபெத், மத்திய ஆசியா மற்றும் சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு வழிகள் வழியாக அசாமிற்கு பட்டு வணிகர்கள் குவிந்தனர் எனக்குறிப்பிடுகிறார். மேலும் அசாமில் பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டு நூல் உற்பத்தி மற்றும் பட்டுச் சேலை நெசவு செய்தல் போன்ற பணிகள் காமரூப பேரரசு மற்றும் சுதியா இராச்சியத்தில் தோன்றியது எனக்குறிப்பிடுகிறார்.
அசாமில் பட்டு வகைகள்
[தொகு]அசாமில் தங்க நிறத்திலான மூகா பட்டு, வெண்மை நிறத்திலான பாட் பட்டு மற்றும் சிவப்பு நிறத்திலான எரி பட்டுத் துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sualkuchi
- ↑ "From 2016, Sualkuchi textile products has a trademark Sualkuchi's in proprietorship of Sualkuchi Tat Silpa Unnayan Samity". Intellectual Property India. Archived from the original on 2016-11-10. Retrieved 2016-11-09.
- ↑ Mokashi, Ravi; Kire, Menuolhoulie. "Silk Weaving Tradition of Sualkuchi, Assam". D'source. Archived from the original on 30 October 2012. Retrieved 10 January 2013.
- ↑ Shastri, B.N, "The Kalikapurana: Text, Introduction and English Trans. with Shloka Index", p. 1240, "The goddess in her Lalitakanta (pleasantly charming) form is known as Mangala chandi,...she wears red silk(rakta-kauseya-vasana)."
- ↑ Shastri, B.N, "The Kalikapurana: Text, Introduction and English Trans. with Shloka Index", p. 1243-45, "O king! Listen to the procedure of worship of Brahma with rapt attention...Red silk(rakta-kauseya-vastram) is his (Brahma's) favourite cloth, rice cooked with milk, sesames, mixed with ghee are his favourite food."
- ↑ Shastri, B.N, "The Kalikapurana: Text, Introduction and English Trans. with Shloka Index", p. 1259, "Vasudeva may be worshipped briefly or elaborately. Red, yellow and white silk are the favourite cloths of Vishnu..."
- ↑ Journal Of Bihar And Orissa Research Society Vol. 3, p.212, "There was another of similar quality. It is known as the Mezankari muga, the worm feeding on the Adakari tree (Litsea citrata)."This muga constituted the dress of the higher ranks, most of which were dyed red with lac but some were white." It is now scarce."
- ↑ "Kirata-jana-kriti", S.K. Chatterjee, 1951, p. 95-96