அசாமின் கலைகள்

அசாமின் கலைகள் கிழக்கத்திய மிக வழமையான ஆடை, கட்டிடம், சிற்பம் மற்றும் ஓவியம் போன்ற கலைநயங்களைக் கொண்டுள்ளன.
சிற்பம் மற்றும் கட்டிடக்கலை
[தொகு]

அசாம் மாநில, கோல்பாரா மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டறியப்பட்ட தொல்லியல் படிமங்கள் இதற்குச் சான்றாகும். தொன்மையான மௌரிய காலத்திய தாது கோபுரங்கள் பண்டைய கலை மற்றும் கட்டிடக்கலை படைப்புகளின் ஆரம்பகால ஆதாரங்களாக (கி.மு 300 முதல் கி.பி 1000 வரை) தோபோர்போடியாவில் (தபர்வதியா) கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், நினைவுச்சின்ன கட்டிடக்கலை எச்சங்கள், தேஜ்பூரில் சட்டத்துடன் கூடிய ஓர் அழகான கதவு, பண்டைய அசாமில் குப்தப் பேரரசின் காலத்தின் சாரநாத் கலைப் பள்ளியிலிருந்த கலைப் படைப்புகளும் சிறந்த சான்றுகளாகும். மகத அரசுடன் அப்போதைய காமரூபரின் நட்புறவு காரணமாக குப்தர்களின் செல்வாக்கில் உருவான கட்டிடக்கலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன. மேலும், உள்ளூர் கலை வடிவங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர் கருத்தாக்கங்களுடன் காட்சிப்படுத்துகின்றன. சில சமயங்களில் தென்கிழக்கு ஆசியா நாடுகளின் உருவ, கட்டிட வடிவமைப்பையும் ஒத்துள்ளன. அசாம் முழுவதும் தற்போது நாற்பதுக்கும் மேற்பட்ட பண்டைய தொல்பொருள் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நூற்றுக்கணக்கான சிற்பங்களும், கட்டிடக்கலை எச்சங்களாகவும், மீதமுள்ள கோயில்களும், அரண்மனைகளும் மற்றும் கருக்களும் உள்ளன. மேலும் பல பிற்பகுதியின்-இடைக்கால கலை மற்றும் கட்டிடக்கலை படைப்புகளுக்குச் சான்றாய் விளங்குகின்றன. கட்டிடங்களின் சுவர்களில் கிடைக்கும் ரங் கர், ஜாய்டோல் போன்ற உருவங்கள் கலைப் படைப்புகளுக்கு குறிப்பிடத் தகுந்த எடுத்துக்காட்டுகளாகும்.
ஓவியங்கள்
[தொகு]அசாமின் கலை நயம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. அழகிய வேலைப்படுகளுடன் ஓவியம் வரைவது அசாமின் பண்டைய பாரம்பரியங்களுள் ஒன்றாகும். பண்டைய வழக்கங்களை சீனப் பயணியான சுவான்ஸாங் (கிபி 7ஆம் நூற்றாண்டு) பதிவுகளிலிருந்து அறியலாம். காமரூப மன்னர் பாஸ்கர் வர்மா மகத மன்னர் ஹர்ஷவர்தனாவுக்கு ஓவியங்கள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட பொருட்கள் உட்பட பல பொருட்களை பரிசளித்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் சில அசாமிய பட்டு மீது படைக்கப்பட்ட கலைவடிவங்களாக இருந்தன. இடைக்காலத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பல கையெழுத்துப் பிரதிகள் பாரம்பரிய ஓவியங்களின் சிறந்த எடுத்துக்காட்டுகளைப் ப்ரதிபலிக்கின்றன. இத்தகைய இடைக்கால படைப்புகளில் மிகவும் பிரபலமானவை ஹஸ்திவிட்யர்ணவா (யானைகளைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை), சித்ரா பாகவதம் மற்றும் கீதா கோவிந்தா போன்றவையும் காணப்படுகின்றன. இடைக்கால ஓவியர்கள் ஹங்கூல் மற்றும் ஹைத்தல் போன்ற உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஓவியப் பொருட்களைப் பயன்படுத்தினர். இடைக்கால அசாமிய இலக்கியம் சித்திரக்காரர்கள் மற்றும் படுவாக்களைப் போற்றுகின்றன. பாரம்பரிய அசாமிய ஓவியங்கள் சித்ரா பாகவதம் போன்ற இடைக்கால படைப்புகளில் உள்ள கருத்துக்கள் மற்றும் வடிவமைப்புகளின் கலை வடிவங்களாக உருப்பெற்றுள்ளன.
அசாமில் பல புகழ்பெற்ற சமகால ஓவியர்கள் உள்ளனர். குவஹாத்தியில் உள்ள குவஹாத்தி கலைக் கல்லூரியானது அசாமியக்கலை வளர்ச்சி சார்ந்த கல்விக்கான அசாமிய அரசு நிறுவனங்களுள் ஒன்றாகும். அசாம் பல்கலைக்கழகத்தின் காட்சிகலைத் துறை (மத்திய பல்கலைக்கழகம்) வடகிழக்கு இந்தியாவின் முக்கியத் துறைகளுள் ஒன்றாகும். இது பயன்பாட்டு கலைகள், வரைகலை மற்றும் ஓவியங்களில் நிபுணத்துவ திட்டத்துடன் காட்சிக் கலைகளில் முனைவர் பட்டப் படிப்பையும் கொண்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பல கலைச்சங்கங்கள் மற்றும் அரசு சாரா குழுக்களும் உள்ளன, மேலும் குவஹாத்தி கலைஞர்கள் சங்கம் குவஹாத்தியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி அமைப்பாகும்.
பீங்கான்
[தொகு]அசாமின் குமார் மற்றும் ஹீரா சமூகத்தினர் அசாமிய மட்பாண்டங்கள் தயாரிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர்.[1]
ஆடை கலை வடிவங்கள்
[தொகு]அசாமின் பெரிய பழங்குடி குழுக்களுள் ஒன்றான மிஸிங் மக்கள் ஜவுளி உற்பத்தியில் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளனர். இந்த பாரம்பரியத்தில் வடிவமைப்புகள் பெரும்பாலும் மத உரை மற்றும் இயற்கையின் கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.[2]
சிவப்பு நிற சாயத்தால், வெள்ளை ஆடைகளில் வடிவமைக்கப்படும் கமோசாக்கள், பெண்களால் விரும்பி அணியப்படும் மேகேலா சடோர், ஜாபி எனப்படும் தொப்பிகள், அசாமின் அடையாளச் சின்னங்களாகும்.


மேற்கோள்கள்
[தொகு]- ↑ Devi, Dr Lakshmi (2022-05-01). "Traditional Pottery in Assam and its Role in Assamese Socio-cultural Life" (in en). Journal of Positive School Psychology: 4504–4507. பன்னாட்டுத் தர தொடர் எண்:2717-7564. https://www.journalppw.com/index.php/jpsp/article/view/4135.
- ↑ Hani, Umme; Das, Amarendra Kumar (2018-03-18). "Traditional Textile motifs of Assam as symbol of Visual identity" (in en). [2018] Congreso Internacional de Cultura Visual. https://conferences.eagora.org/index.php/imagen/CV2018/paper/view/5410. பார்த்த நாள்: 15 September 2022.