அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம்
National Movement for the Liberation of Azawad
ⵜⴰⵏⴾⵔⴰ ⵏ ⵜⵓⵎⴰⵙⵜ ⴹ ⴰⵙⵏⵏⴰⵏⵏⵓ ⵏ ⴰⵣⴰⵓⴷ
الحركة الوطنية لتحرير أزواد
துவாரெக் கிளர்ச்சி
MNLA emblem.png
இயங்கிய காலம் அக்டோபர் 2011 – இன்று
கொள்கை சகாரா தேசியம்
தலைவர்கள் இப்ராகிம் அக் பகாங்கா
மூசா அக் அச்சரடூமான்
அக் முகமது நஜிம்(இராணுவத் தலைவர்)
பிலால் அக் செரிப்[1] (பொதுச் செயலர்)
செயற்பாட்டுப்
பகுதி
வடக்கு மாலி
Part of  அசவாத்
கூட்டு  லிபியா
 மூரித்தானியா
(alleged)
எதிராளிகள்  மாலி
 அல்ஜீரியா

அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் (National Movement for the Liberation of Azawad), அல்லது அசவாத் தேசிய விடுதலை இயக்கம் (Azawad National Liberation Movement[2], பிரெஞ்சு: Mouvement National pour la Libération de l'Azawad; MNLA, முன்னாளில் அசவாத் தேசிய இயக்கம்) என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் மாலி நாட்டின் பகுதியாக இருக்கும் அசவாத் பிராந்தியத்தில் இயங்கும் ஒரு அரசியல், மற்றும் ஆயுதப் போராளி இயக்கம் ஆகும். துவாரெக் இனத்தவரைக் கொண்டுள்ள இந்த இயக்க உறுப்பினர்கள் லிபியாவில் முன்னாள் தலைவர் முஅம்மர் அல் கதாஃபியின் இராணுவத்தில் இணைந்து போரிட்டவர்கள்,[3] பின்னர் லிபியப் புரட்சியின் முடிவில் நாடு திரும்பினார்கள். இந்த இயக்கம் 2011 அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டது. அல் காயிதாவுடன் இந்த இயக்கத்திற்குத் தொடர்புள்ளதாக மாலி அரசு குற்றம் சாட்டி வருகிறது[4]. ஆனாலும், இக்குற்றச்சாட்டுகளை இந்த இயக்கத்தினர் மறுத்துள்ளனர். 2012 ஏப்ரல் 1 ஆம் நாளில் இந்த இயக்கம் அன்சார் தைன் என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழுவினருடன் இணைந்து வடக்கு மாலியின் அனேகமான பகுதிகளைக் கைப்பற்றியிருந்தனர். அசவாத் தேசிய விடுதலை இயக்கம் ஏப்ரல் 6 ஆம் நாள் அசவாத் பிராந்தியத்தைத் தனிநாடாக அறிவித்துள்ளதுடன், நிலையான அரசு அமைக்கப்படும் வரை தமது இயக்கம் இடைக்கால அரசாங்கம் ஒன்றையும் அமைத்திருப்பதாகக் கூறியுள்ளது[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]