அசலினா ஒசுமான் சாயித்
அசலினா ஒசுமான் சாயித் Azalina Othman Said | |
|---|---|
அசலினா ஒசுமான் சாயித் (2023) | |
| மலேசிய பிரதமர் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 திசம்பர் 2022 | |
| துணை | ராம் கர்பால் சிங் (2022–2023) எம். குலசேகரன் (2023) |
| முன்னையவர் | வான் சுனைடி துங்கு ஜாபார் |
| பதவியில் 29 சூலை 2015 – 9 மே 2018 | |
| முன்னையவர் | நான்சி சுக்ரி |
| மலேசிய மக்களவை துணைத் தலைவர் II | |
| பதவியில் 13 சூலை 2020 – 23 ஆகத்து 2021 | |
| முன்னையவர் | இங்கா கோர் மிங் |
| தலைவர் மலேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் | |
| பதவியில் 1 சூன் 2015 – 29 சூலை 2015 | |
| மலேசிய சுற்றுலா துறை அமைச்சர் | |
| பதவியில் 18 மார்ச் 2008 – 9 ஏப்ரல் 2009 | |
| ஆட்சியாளர் | சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் |
| மலேசிய இளைஞர் விளையாட்டு அமைச்சர் | |
| பதவியில் 27 மார்ச் 2004 – 18 மார்ச் 2008 | |
| முன்னையவர் | இசாமுடின் உசேன் |
| பின்னவர் | இசுமாயில் சப்ரி யாகோப் |
| பெங்கேராங் மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 21 மார்ச் 2004 | |
| பெரும்பான்மை | போட்டி இல்லை (2004); போட்டி இல்லை (2008); 26,992 (2013); 21,829 (2018); 21,738 (2022) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 31 திசம்பர் 1963 ஜொகூர் பாரு நகரம், ஜொகூர், |
| அரசியல் கட்சி | |
| உறவுகள் | செயிக் அப்துல்லா அகமத் (மாமா) |
| முன்னாள் மாணவர் | மலாயா பல்கலைக்கழகம் இலண்டன் பொருளியல் பள்ளி |
| பணி | வழக்கறிஞர், கராத்தே பயிற்றுநர் |
அசலினா ஒசுமான் சாயித் (ஆங்கிலம்; மலாய்: Azalina Othman Said) (பிறப்பு: 31 திசம்பர் 1963) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; நவம்பர் 2004 முதல் ஜொகூர் பெங்கேராங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் 2022 முதல் பிரதமர் துறையில் அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். மலேசிய மக்களவை துணைத் தலைவர் பதவி வகித்த முதல் மலேசியப் பெண்மணி என்று சாதனை படைத்த இவர், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் 2021 முதல் 2022 வரை சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான மலேசியப் பிரதமரின் சிறப்பு அறிவுரைஞராகவும் பணியாற்றினார்.
2004-இல், இவர் பெங்கேராங் மக்களவைத் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற இவர், மலேசியாவின் முதல் பெண் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் பணியாற்றிய இவர், 2008-2009-ஆம் ஆண்டுகளில் சுற்றுலாத்துறை அமைச்சரானார். தற்போது மலேசிய மக்களின் மத்தியில் நன்கு அறிமுகமான பெண்ணுரிமை போராட்டவாதியாகவும் பயணித்து வருகிறார்.
அசலினா ஒசுமான் சாயித் (ஆங்கிலம்; மலாய்: Azalina Othman Said) (பிறப்பு: 31 திசம்பர் 1963) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; நவம்பர் 2004 முதல் ஜொகூர் பெங்கேராங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் 2022 முதல் பிரதமர் துறையில் அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். மலேசிய மக்களவை துணைத் தலைவர் பதவி வகித்த முதல் மலேசியப் பெண்மணி என்று சாதனை படைத்த இவர், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் 2021 முதல் 2022 வரை சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான மலேசியப் பிரதமரின் சிறப்பு அறிவுரைஞராகவும் பணியாற்றினார்.
2004-இல், இவர் பெங்கேராங் மக்களவைத் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற இவர், மலேசியாவின் முதல் பெண் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் பணியாற்றிய இவர், 2008-2009-ஆம் ஆண்டுகளில் சுற்றுலாத்துறை அமைச்சரானார். தற்போது மலேசிய மக்களின் மத்தியில் நன்கு அறிமுகமான பெண்ணுரிமை போராட்டவாதியாகவும் பயணித்து வருகிறார்.
வாழ்க்கை
[தொகு]அசலினா 1963 திசம்பர் 31 அன்று ஜொகூர் பாருவில் பிறந்தார்.[1] பினாங்கில் வளர்ந்தார்; மற்றும் பூகிஸ், அத்ராமி அரபு (Hadharem) கலப்பு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். அவர் சட்டம் மற்றும் பொது நிர்வாகப் படிப்புகளைப் பயின்று, மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மலாயா பல்கலைக்கழகம், மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பொருளியல் பள்ளி ஆகிய பல்கலைக்கழகங்களில்[2][3][4] பட்டங்களைப் பெற்றார்.
தம்முடைய சட்ட வாழ்க்கையை 1988-இல் ராஜா தெரில் & லோ நிறுவனத்தில் சட்ட உதவியாளராகத் தொடங்கினார். 1989-இல் மலேசிய வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். 1990-இல் அம்னோவில் இணைந்தார். அதன் பின்னர் பெண்கள் செயல்பாடுகள், உரிமையியல் கோரிக்கைகள் மற்றும் பெருநிறுவன வங்கிச் சேவைகளில் நிபுணத்துவம் பெற்றார். 1994-இல் சான் & சியா நிறுவனத்திலும், பின்னர் அதன் சிங்கப்பூர் கிளை நிறுவனமான இசுகைன்; சைத் இப்ராகிம் & கோ நிறுவனத்திலும் பங்குதாரரானார். 2000-இல், இவர் அம்னோ உச்ச மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் அம்னோ உச்ச மன்றப் பதவியை வகித்த மிக இளைய பெண் என்ற பெருமையையும் பெற்றார்.
2009-இல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உள்ளான போதிலும், நஜிப் ரசாக் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட போதிலும், இவர் தமது அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். இவற்றைத் தொடர்ந்த தேர்தல்களில் தமது நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். பற்பல அரசியல் இடர்பாடுகளுக்கும் இடையில் இவர் தம்முடைய நாடாளுமன்ற மகளிர் பேரவையின் தலைவர், மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர், மற்றும் மலேசிய இரசாயன நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநர் போன்ற பதவிகளை தக்க வைத்துக் கொண்டார்.
அரசியல்
[தொகு]2015-இல் பிரதமர் துறை அமைச்சராகச் சட்ட நடவடிக்கைகளைக் கவனிக்கும் பொறுப்பில் அசலினா மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்பினார். மேலும், ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழலின் போது நஜிப்பிற்கு பொதுப் படையாக ஆதரவளித்து, பொது மக்களின் பார்வையையும் ஈர்த்தார்.
பின்னர், 2020 முதல் 2021 வரை மலேசிய மக்களவையில் முதல் பெண் துணை அவைத் தலைவராகவும், 2021 முதல் 2022 வரை சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரதமரின் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்.
2022 பொதுத் தேர்தலில், இவர் தமது பெங்கராங் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டார். பின்னர் இவர், காலாவதியான சட்டங்களை நவீனமயமாக்கும் வகையில், சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், 2024-இல் பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பேரவையில் மலேசியாவின் முதல் தலைவரானார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2004 | P157 பெங்கேராங் மக்களவைத் தொகுதி | அசலினா ஒசுமான் சாயித் (அம்னோ) | போட்டி இல்லை | |||||||||
| 2008 | அசலினா ஒசுமான் சாயித் (அம்னோ) | போட்டி இல்லை | ||||||||||
| 2013 | அசலினா ஒசுமான் சாயித் (அம்னோ) | 26,992 | 83.64% | தெங்கு இந்தான் தெங்கு அமீது (மக்கள் நீதிக் கட்சி)[7] | 4,484 | 13.89% | 33,067 | 22,508 | 87.02% | |||
| அசமான் சொகாரி (சுயேச்சை (அரசியல்)) | 795 | 2.46% | ||||||||||
| 2018 | அசலினா ஒசுமான் சாயித் (அம்னோ) | 21,829 | 67.71% | நோர்லிசா நிகாதிரன் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) | 10,412 | 32.29% | 33,580 | 11,417 | 82.96% | |||
| 2022 | அசலினா ஒசுமான் சாயித் (அம்னோ) | 21,738 | 51.96% | பைருல் நிசார் அகமது (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) | 16,728 | 39.98% | 41,840 | 5,010 | 75.64% | |||
| சக்காரியா சாலே (அமாணா) | 3,374 | 8.06% | ||||||||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ding, Jo-Ann (2010-10-11). "An Umno that thinks beyond race" (in en-US). The Nut Graph இம் மூலத்தில் இருந்து 2025-05-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250517145103/https://www.thenutgraph.com/an-umno-that-thinks-beyond-race/.
- ↑ Jafwan Jaafar (2016-03-11). "Indo-pendence: 20 top M'sian politicians of Indonesian descent" (in en-US). Free Malaysia Today இம் மூலத்தில் இருந்து 2016-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160616134958/http://www.freemalaysiatoday.com/category/leisure/2016/03/11/indo-pendence-leading-msian-politicians-of-indonesian-descent/.
- ↑ "Azalina Meets Uncle Shake In Paris". The Rakyat Post (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-05-19. Retrieved 2025-08-06.
- ↑ "Azalina first woman to hold Deputy Dewan Rakyat Speaker's post" (in en). Bernama. 2020-07-13 இம் மூலத்தில் இருந்து 2025-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250225220654/https://www.bernama.com/en/news.php?id=1859999.
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri" (in மலாய்). Election Commission of Malaysia. Archived from the original on 2022-01-27. Retrieved 6 June 2010. Percentage figures based on total turnout.
- ↑ "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Johor". The Star. Archived from the original on 2025-10-01. Retrieved 2025-10-24.
- ↑ NIEZAM ABDULLAH (22 April 2013). "Dayangku Intan Tidak Gentar 'Lawan' Azalina Othman" (in ms). The Star (Malaysia). https://www.mstar.com.my/spotlight/hiburan/2013/04/22/dayangku-intan-tidak-gentar-lawan-azalina-othman.
சான்றுகள்
[தொகு]- Khoo, Gaik Cheng (2006). "'You've come a long way, baby' Erma Fatima, film and politics". South East Asia Research (Taylor & Francis) 14 (2): 179–209. https://openresearch-repository.anu.edu.au/items/447c78aa-3a41-4191-939e-5e60d112dbf2.