அசமஞ்சன்
தோற்றம்
| அசமஞ்ஜசன் | |
|---|---|
| துணை | அம்புஜாக்சி |
| பெற்றோர்கள் | சகரன்-கேசினி |
| குழந்தைகள் | அம்சுமான் |
| நூல்கள் | இராமாயணம், புராணங்கள் |
| சமயம் | அயோத்தி |
| அரசமரபு | இச்வாகு |
அசமஞ்ஜசன் அல்லது அசமஞ்சன் (Asamanjasa or Asamanja) (சமசுகிருதம்:असमञ्जस), இச்வாகு குல மன்னரான சகரனின் மூத்த மகன் ஆவார்.[1]
தொன்ம வரலாறு
[தொகு]இராமாயணம்
[தொகு]மன்னர் சகரனுக்கு இரு மனைவியர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே இமயமலையில் தவமிருந்து,. முனிவர் பிருகு அளித்த வரத்தால், மூத்த மனைவி கேசினி அசமஞ்சன் எனும் ஒரு குழந்தையும் மற்றும் இளைய மனைவி 60,000 குழந்தைகள் பெற்றெடுத்தாள்.[2]
இளைஞன் அசமஞ்சன் குறும்புத்தனமாக நடந்து கொண்டான்.சரயு ஆற்றில் குழந்தைகளை தூக்கி எறிந்தும், மூழ்கடித்துக் கொன்றும் விளையாடினான். எனவே மன்னர் சகரன் அசமஞ்சனை நாட்டை விட்டு வெளியேற்றினார்.[3][1]ஆனால் அசமஞ்சனின் மகன் அம்சுமான் மக்களிடத்தில் நற்பெயர் பெற்றான். மன்னர் சகரனுக்குப் பின் கோசல நாட்டை ஆண்டான்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Valmiki (2000). Ramayana. Translated by Sattar, Arshia. Penguin Books Limited. p. 110. ISBN 978-93-5118-211-5.
- ↑ www.wisdomlib.org (2019-01-28). "Story of Asamañjasa". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-10-22.
- ↑ James Talboys Wheeler (1869). The History of India from the Earliest Ages. Vol. 2. London: N. Trübner & Co. p. 126. ISBN 9780524087794.
