அசன் அசுகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஹம்மது ஹசான் அஸ்காரி (Hasan Askari உருது: محمد حسَن عسکری ) (1919 - 18 ஜனவரி 1978) ஒரு பாகிஸ்தான் அறிஞர், இலக்கிய விமர்சகர், எழுத்தாளர் மற்றும் நவீன உருது மொழியின் மொழியியலாளர் ஆவார். ஆரம்பத்தில் இவர் மேற்கத்திய இலக்கிய, தத்துவ மற்றும் மனோதத்துவ படைப்புகளை உருது மொழியில் மொழிபெயர்த்தார், குறிப்பாக அமெரிக்க, ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ரஷ்ய இலக்கியங்களின் பழமையான நூல்களை உருது மொழிக்கு மொழிபெயர்த்தார் .[1] இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் சித்தாந்தத்தின் ஆதரவாளரும் ஆவார்.[2][3] இவர் 1978 ஆம் ஆண்டில் காலமானார். தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் இவர் குர் ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.[4] இவரின் இறுதிச் சடங்ககுகள் அனைத்தும் முப்தி முஹம்மது தாகி உஸ்மானி தலைமையில் நடைபெற்றது.[5]

சுயசரிதை[தொகு]

முஹம்மது ஹசன் அஸ்காரி நவம்பர் 5, 1919 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாரில் உள்ள ஒரு கிராமத்தில் பாரம்பரிய, நடுத்தர வர்க்க முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா மல்வி ஹுசாமுதீன் ஒரு அறிஞர் ஆவார். இவரின் தந்தை முஹம்மது மொய்னுல் ஹக் அருகிலுள்ள ஷிகார்பூரில் கணக்காளராக பணிபுரிந்தார். இவரின் பெற்றோருக்கு ஆறு குழந்தைகள். இவர் ஆறு குழந்தைகளில் மூத்தவர் ஆவார்.[6] பிப்ரவரி 1950 இல், இவர் ஒரு அரசாங்க பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்ற கராச்சிக்குச் சென்றார், அங்கு இவர் சில மாதங்கள் மட்டுமே பணியில் இருந்தார். இஸ்லாமியா கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக வேலை கிடைத்ததால் இவர் லாகூருக்கு திரும்பவில்லை. கர்ரார் உசேன் போன்ற சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் அங்கேயே இவர் தங்கினார்.[7] அவரது மறைவுக்கு பின் அவரது தனிப்பட்ட நூல்கள் யாவும் பேதில் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அந்த நூலகம் கராச்சியின் சராபதாபாத்தில் அமைந்துள்ளது.

படைப்புகள்[தொகு]

1942 ஆம் ஆண்டில் மேரி பெஹ்தரின் நாஸ்ம் என்பதனை வெளியிட்டார். பின்னர் ரியாசத் அவுர் இன்கிலாப் எனும் நூலினை எழுதினார். அந்த நூல் விளாடிமிர் லெனினின் தெ ஸ்டேட் அண்ட் தெ ரெவோல்யூசன் எனும் நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். 1943 ஆம் ஆண்டில் ஜசீரி மற்றும் மேரா பெஹ்தரின் அப்சனா எனும் சிறுகதைத் தொகுப்புகளை எழுதினார்.1947 ஆம் ஆண்டில் கியாமத் ஹாம் ரிகாப் அயே நா ஆயே எனும் புதினத் தொகுப்பினையும் 1948 இல் அக்ரி எனும் மொழிபெயர்ப்பினையும் வெளியிட்டார். 1953 ஆம் ஆண்டில் சுர்க் ஓ சியா எனும் விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். மேலும் 1967 இல் சீதார யா பட்பன் மற்றும் வக் கி ராகினி ஆகிய விமர்சனக் கட்டுரைகளை எழுதினார்.

இறப்பு[தொகு]

மாரடைப்பு காரணமாக, தனது 57 ஆம் வயதில், ஜனவரி 18, 1978 அன்று காலமானார். கராச்சியின் தாருல் உலம் கல்லறையில் முப்தி முஹம்மது ஷாஃபிக்கு அடுத்ததாக இவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் இவர் குர் ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.[4] இவரின் இறுதிச் சடங்ககுகள் அனைத்தும் முப்தி முஹம்மது தாகி உஸ்மானி தலைமையில் நடைபெற்றது.[5]

குறிப்புகள்[தொகு]

  1. Nasir Ahmad Farooki, A selection of contemporary Pakistani short stories, Ferozsons (1955), p. 79
  2. Mehr Afshan Farooqi, Urdu Literary Culture: Vernacular Modernity in the Writing of Muhammad Hasan Askari, Springer (2012), p. 43
  3. Farrukh Kamrani (21 November 2015). "The lost world of Ishtiaq Ahmad (plus Hasan Askari)". The Express Tribune (newspaper). 1 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 Maulana Mufti Muhammad Shafi, Ma'ariful Qur'an, Maktaba-eDarul-'Uloom, volume 1, p. viii
  5. 5.0 5.1 Mehr Afshan Farooqi, Urdu Literary Culture: Vernacular Modernity in the Writing of Muhammad Hasan Askari, Springer (2012), pp. 44-45
  6. Mehr Afshan Farooqi, Urdu Literary Culture: Vernacular Modernity in the Writing of Muhammad Hasan Askari, Springer (2012), p. 19
  7. Mehr Afshan Farooqi, Urdu Literary Culture: Vernacular Modernity in the Writing of Muhammad Hasan Askari, Springer (2012), pp. 37-38
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசன்_அசுகாரி&oldid=2868140" இருந்து மீள்விக்கப்பட்டது