உள்ளடக்கத்துக்குச் செல்

அசதுத்தீன் ஒவைசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசதுத்தீன் ஓவாய்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அசதுத்தீன் ஒவைசி (Asaduddin Owaisi, பி. 13 மே, 1969) இந்திய அரசியல்வாதி ஆவார், மேலும் இவர் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஹைதராபாத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 15வது பாராளுமன்றத்தின் சன்சாத் ரத்னா விருதினையும் பெற்றுள்ளார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஹைதராபாது மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

பதவிகள்

[தொகு]

வாழ்க்கை

[தொகு]

அசதுத்தீன் ஒவைசி 11 திசம்பர் 1996 ஆம் ஆண்டு பார்ஹீன் ஒவைஸி யைத் (Farheen Owaisi) திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசதுத்தீன்_ஒவைசி&oldid=3999538" இலிருந்து மீள்விக்கப்பட்டது