அங்கே ஓடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆள்கூறுகள்: 6°06′13″S 106°46′02″E / 6.1037°S 106.7673°E / -6.1037; 106.7673
ஆங்கி ஆறு (காலி ஆங்கி, சுங்காய் ஆங்கி)
சிக்கியூமியூ
ஆறு
Map of rivers and canals in Jakarta 2012.jpg
ஆங்கி ஆறு ("கா. ஆங்கி"),வரைபடத்தின் மேல் இடது புறம் ஜகார்த்தாவிலுள்ள ஆற்றின் கால்வாய்களைக் காட்டுகிறது. (2012)
நாடு  இந்தோனேசியா
மாநிலம் ஜகார்த்தா
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் போகார்
கழிமுகம் செங்காரெங் வடிநிலம் [ஜாவா கடல்]
 - elevation மீ (3 அடி)
 - ஆள்கூறு 6°06′13″S 106°46′02″E / 6.1037°S 106.7673°E / -6.1037; 106.7673
நீளம் 91.25 கிமீ (57 மைல்)

ஆங்கி ஆறு (இந்தோனேசியா: காலி ஆங்கி அல்லது சுங்காய் ஆங்கி ) என்பது இந்தோனேசியாவின் ஜகார்த்தா மாகானத்தில் ஓடும் 91.25 கிலோமீட்டர் நீளமுடைய ஆறு ஆகும். இந்த ஆறு மேற்கு ஜாவாவின் போகார் பகுதியிலிருந்து தங்கெராங் (பண்டென்) மற்றும் ஜகார்த்தா நகரங்களின் வழியே சென்று செங்காரெங் வடிநிலப் பகுதி வழியாக ஜாவா கடலில் சென்று கலக்கிறது.[1] [2]

சொற்பிறப்பியல்[தொகு]

16 ஆம் நூற்றாண்டில் ஜகார்த்தாவை ஆட்சி செய்த பந்தன் சுல்தானியத்தைச் சேர்ந்த துபாகசு ஆங்கி என்ற மன்னனின் பெயராக இந்த ஆற்றுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மற்றொரு கருத்துப்படி 1740 ல் பத்தாவியா என்ற இடத்தில் நடைபெற்ற 10,000 க்கும் மேற்பட்ட சீன இனத்தவர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினரால் படுகொலை செய்யப்பட்டு இந்த ஆற்றில் வீசியெறியப்பட்டனர். ஆங்கி என்பதற்கு ஒக்கியன் மொழியில் சிவப்பு என்று பொருள்படும். ஆதலால் இரத்தம் தோய்ந்த இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்த ஆற்றுக்கு ஆங்கி என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.[3]

முரா ஆங்கி கிராமத்தில் ஆங்கி ஆறு (2007)

நீரியல்[தொகு]

ஆங்கியின் பிரதான ஆறு 91.25 கிலோ மீட்டர் (56.70 மைல்கள்) நீளத்துடன் 480 கிமீ² பளப்பளவுடைய நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் (இந்தோனேசியா: தேரா பெங்காலிரான் சுங்காய்) கொண்டுள்ளது. சராசரியாக தினசரி மழை வீழ்ச்சி 132 மிமீ மற்றும் உச்சபட்ச அளவாக 290 மீ³ மழைப்பொழிவும் கொண்டதாகக் கானப்படுகிறது. இந்த ஆறு கிழக்கு ஜாவாவின் போகார் நகரத்தின் திமோர், மென்டாங் டான் சிலெண்டெக் ஆகிய மாவட்டங்களில் உள்ள நிரந்தரமான நீர்ப்பிடிப்பு பகுதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதால் எக்காலாத்திலும் வற்றாத ஆறாக உள்ளது. அங்கிருந்து தெற்கு நோக்கிப் தெற்கு தஞ்சாங்ங், தங்கேர்காங், ஜகார்த்தா வழியாகப் பாய்ந்தோடி மேற்கு ஜகார்த்தாவின் பெஞ்சரிஜானின் முவாரா கிராமத்தில் உள்ள முகத்துவாரத்தில் ஜாவா கடலில் கலக்கிறது. மழைக்காலங்களில் இந்த ஆறு பினாங்கு, சிபான்டோ, சிலிடக் (அனைத்து தங்கேரங் மாகான மாவட்டங்கள்), ஜோக்லோ, கெம்பங்கன், ராவா புவாயா, துரி கோசாம்பி மற்றும் செங்கரெங் (அனைத்தும் மேற்கு ஜகார்தா) மாவட்டங்களில் ஆண்டுதோறும் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. [4][5][6]

புவியியல்[தொகு]

பெரும்பாலாக அயன மழைக்காட்டுக் காலநிலை (Af) (கோப்பென் காலநிலை வகைப்பாடு அடிப்படையில்) நிகழும் ஜாவாவின் வடமேற்கு பகுதியில் ஆங்கி ஆறு பாய்கிறது. [7] இப்பகுதியின் ஆண்டு சராசரி வெப்பநிலை 27°C நிலவுகிறது. 30°C வெப்பநிலையுடன் மிக வெப்பமானதாக மார்ச்சு மாதமும், 26°C வெப்பநிலையுடன் மிகக் குளிர்ந்த மாதமாக மே மாதமும் உள்ளன.[8] ஆண்டு சராசரி மழைப்பொழிவு 3674 மிமீ ஆகும். 456 மில்லி மீட்டருடன் மிகவும் அதிகமான மழைப்பொழிவு மாதமாக திசம்பர் மாதமும், 87 மிமீ அளவுடக் செப்டம்பர் மிகக் குறைந்த மழைப்பொழிவு மாதமாக உள்ளது. [9]

நுண்ணுயிரியல் மற்றும் ஆய்வுகள்[தொகு]

ஆங்கி ஆற்றில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அதனைத் தொடர்ந்து ஆற்றை ஒட்டி வசிக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சிகைள் தொடர்பாக சூ-சி அமைப்பின் ஒத்துழைப்போடு இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புல நுண்ணுயிரியல் துறை ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஆங்கி ஆற்றின் குடிநீர் தரம் மற்றும் நுண்ணுயிரியல் தொடர்பான ஒரு பல்நோக்கு ஆய்வை மேற்கொள்ள ஆங்கி ஆற்றில் 8 இடங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளைச் சோதித்து முடிவுகளை வெளியிட்டுள்ளன. [10]

வரலாற்று இடங்கள்[தொகு]

1657 ம் ஆண்டு டச்சு கிழக்கு இந்திய கம்பெனி முக்கர்வாட் கால்வாய் மற்றும் ஆங்கி ஆறு சந்திக்கும் இடத்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. இக்கோட்டையின் வரலாற்று பெயர்கள் பின்வருமாறு: அன்கீ, அன்கே, அன்கீ.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mouth of Kali Angke to Java Sea - Geonames.org
  2. BBWS Ciliwung Cisadane. Pengendalian Banjir dan Perbaikan Sungai Ciliwung Cisadane (PBPS CC). https://konservasidasciliwung.wordpress.com/kebijakan-tentang-ciliwung/bbws-ciliwung-cisadane/ Archived in Konservasi DAS Ciliwung] - April 2012.
  3. (இந்தோனேசியம்) Horde, G. dkk. 2012. "Sejarah Kawasan Angke Di Batavia". Article in Budaya Tionghoa dated 20 March 2012. Accessed 03 May 2017.
  4. Poskota: Kali Angke Meluap, Ciledug Indah Kebanjiran. Berita Jumat, 23 Januari 2015 - 13:59 WIB
  5. Tribun News: Banjir di Kota Tangerang Disebabkan Kali Angke Meluap. Berita Senin, 14 November 2016 - 12:25 WIB
  6. Okezone: Waduh! Rawa Buaya dan Duri Kosambi Terendam Banjir. Berita Kamis, 23 Maret 2017 - 09:39 WIB
  7. Peel, M C; Finlayson, B L; McMahon, T A (2007). "Updated world map of the Köppen-Geiger climate classification". Hydrology and Earth System Sciences 11. doi:10.5194/hess-11-1633-2007. http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html. 
  8. "NASA Earth Observations Data Set Index". NASA (30 January 2016).
  9. "NASA Earth Observations: Rainfall (1 month - TRMM)". NASA/Tropical Rainfall Monitoring Mission (30 January 2016).
  10. https://www.researchgate.net/publication/274340233_Water_quality_of_Angke_River_Microbiological_point_of_view
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கே_ஓடை&oldid=2899789" இருந்து மீள்விக்கப்பட்டது