அங்குசு பெயின்சு
அங்குசு பெயின்சு (Ankush Bains) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட விளையாட்டு வீரராவார். அங்குசு கட்கர் சிங் பெயின்சு என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1995 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இமாச்சலப் பிரதேச அணிக்காக குச்சக் காப்பாளராக விளையாடுகிறார். இவர் மார்ச் 3, 2014ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் தேதியன்று இமாச்சலப் பிரதேச அணிக்காக 2013–14 விச்சய் அசாரே கோப்பை போட்டியில் பட்டியல் ஏ அணியில் அறிமுகமானார்.[1] ஐபிஎல் 2015 பருவத்திற்காக சென்னை சூப்பர் கிங்சு அணியால் அடிப்படை விலையான ₹ 10 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் 2016 ஐபிஎல் ஏலத்தில் புதிய அணியான "ரைசிங் புனே சூப்பர்செயண்ட்சு அணி இவரை ரூ. 10 லட்சத்திற்கு வாங்கியது.[2]
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவர் 2018–19 தியோதர் கோப்பைக்கான இந்தியா பி அணியில் இடம் பெற்றார்.[3] 2018ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் 2018 ஏசிசி வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[4] இதே மாதத்தின் பிற்பகுதியில், 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்கள் ஏலத்தில் தில்லி கேப்பிட்டல் அணிக்காக வாங்கப்பட்டார்.[5][6] 2020 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக தில்லி கேப்பிட்டல்சு அணி இவரை விடுவித்தது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "North Zone, Delhi, Mar 3 2014, Vijay Hazare Trophy". ESPNcricinfo. Retrieved 19 November 2020.
- ↑ "As it happened: IPL-8 player auction". The Hindu. Retrieved 14 April 2015.
- ↑ "Rahane, Ashwin and Karthik to play Deodhar Trophy". ESPNcricinfo. Retrieved 19 October 2018.
- ↑ "India Under-23s Squad". ESPNcricinfo. Retrieved 3 December 2018.
- ↑ "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPNcricinfo. Retrieved 18 December 2018.
- ↑ "IPL 2019 Auction: Who got whom". The Times of India. Retrieved 18 December 2018.
- ↑ "Where do the eight franchises stand before the 2020 auction?". ESPNcricinfo. Retrieved 15 November 2019.