உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கிதா பாம்பிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கிதா பாம்பிரி
தாய்மொழிப் பெயர்अंकिता भाम्बरी
நாடு இந்தியா
பிறப்பு28 அக்டோபர் 1986 (1986-10-28) (அகவை 39)
புது தில்லி, இந்தியா
தொழில் ஆரம்பம்2000
விளையாட்டுகள்வலது கை
பரிசுப் பணம்$62,691
ஒற்றையர் போட்டிகள்
பட்டங்கள்9 ITF
அதிகூடிய தரவரிசைஉலகத் தரவரிசை 332 (1 மே 2006)
இரட்டையர் போட்டிகள்
பட்டங்கள்9 ITF
அதியுயர் தரவரிசைஉலகத் தரவரிசை 299 (31 அக்டோபர் 2005)

அங்கிதா பாம்பிரி (இந்தி: अंकिता भाम्बरी; பிறப்பு: 28 அக்டோபர் 1986) என்பவர் இந்தியாவின் முன்னாள் தொழில்முறை டென்னிசு வீராங்கனையும் பயிற்சியாளரும் ஆவார்.

2006 மே மாதத்தில் உலக ஒற்றையர் தரவரிசையில் 332-ஆவது இடத்தைப் பெற்று தனது தொழில் வாழ்க்கையின் உயர்ந்த ஒற்றையர் தரவரிசையை எட்டினார். இரட்டையர் பிரிவில் 2005 அக்டோபர் மாதத்தில் உலகத் தரவரிசையில் 299-ஆவது இடத்தை அடைந்தார்.

2018 ஆம் ஆண்டில் இந்திய பெட் கிண்ன அணியின் (விளையாடாத) தலைவராகப் பணியாற்றினார். 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் இந்திய டென்னிசு அணியின் பயிற்சியாளராக இருந்தார். மேலும், 2018 மற்றும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய டென்னிசு அணியின் தலைவராகவும் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.

தனது தொழில்முறை வாழ்க்கையில் இந்திய டென்னிசு அவை மகளிர் சுற்றுப்போட்டிகளில் ஒன்பது ஒற்றையர் பட்டங்களையும் ஒன்பது இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

ஒற்றையர்: 18 (9–9)

[தொகு]
முடிவு எண் நாள் போட்டி ஆடுகளம் எதிரணி புள்ளிகள்
வெற்றியாளர் 1. 22 ஏப்ரல் 2002 ஐடிஎஃப் புனே, இந்தியா களிமண் இந்தியா ஷீதல் கவுதம் 6–3, 6–2
இரண்டாம் இடம் 2. 27 மே 2002 ஐடிஎஃப் மும்பை, இந்தியா தரைச் சீலை இந்தியா ஷீதல் கவுதம் 4–6, 6–2, 4–6
இரண்டாம் இடம் 3. 12 மே 2003 ஐடிஎஃப் புது தில்லி, இந்தியா கடினத் தரை இந்தியா லிசா பெரேரா விப்லவ் 4–6, 6–4, 2–6
வெற்றியாளர் 4. 26 மே 2003 ஐடிஎஃப் புது தில்லி, இந்தியா கடினத் தரை இந்தியா இஷா லக்கானி 6–3, 6–3
இரண்டாம் இடம் 5. 23 மே 2004 ஐடிஎஃப் லக்னோ, இந்தியா புல்தரை இந்தியா உருஷ்மி சக்ரவர்த்தி 2–6, 6–2, 6–7
இரண்டாம் இடம் 6. 30 மே 2004 ஐடிஎஃப் புது தில்லி, இந்தியா கடினத் தரை இந்தியா உருஷ்மி சக்ரவர்த்தி 4–6, 4–6
வெற்றியாளர் 7. 6 திசம்பர் 2004 ஐடிஎஃப் கொல்கத்தா, இந்தியா கடினத் தரை தாய்லாந்து விலாவன் சோப்டாங் 6–3, 7–5
இரண்டாம் இடம் 8. 13 திசம்பர் 2004 ஐடிஎஃப் குருகிராம், இந்தியா களிமண் இந்தியா உருஷ்மி சக்ரவர்த்தி 7–6, 6–7, 4–6
இரண்டாம் இடம் 9. 9 மே 2005 ஐடிஎஃப் அகமதாபாத், இந்தியா கடினத் தரை சீனா சன் ஷெங்நான் 2–6, 2–6
வெற்றியாளர் 10. 7 நவம்பர் 2005 ஐடிஎஃப் புனே, இந்தியா களிமண் இந்தியா பாருல் கோஸ்வாமி 6–1, 6–3
வெற்றியாளர் 11. 23 சனவரி 2006 ஐடிஎஃப் புது தில்லி, இந்தியா கடினத் தரை கிர்கிசுத்தான் க்சேனியா பால்கினா 6–4, 6–3
வெற்றியாளர் 12. 27 மார்ச் 2006 ஐடிஎஃப் மும்பை, இந்தியா களிமண் சப்பான் கசுசா இடோ 6–2, 5–7, 6–1
வெற்றியாளர் 13. 12 சூன் 2006 ஐடிஎஃப் புது தில்லி, இந்தியா கடினத் தரை இந்தியா இஷா லக்கானி 6–3, 6–2
இரண்டாம் இடம் 14. 25 ஆகத்து 2007 ஐடிஎஃப் நொய்டா, இந்தியா கார்பெட் இந்தியா தாரா ஐயர் 6–3, 4–6, 3–6
வெற்றியாளர் 15. 19 நவம்பர் 2007 ஐடிஎஃப் ஔரங்காபாத், இந்தியா களிமண் இந்தியா சனா பாம்ப்ரி 6–3, 7–6
இரண்டாம் இடம் 16. 9 சூன் 2008 ஐடிஎஃப் குருகிராம், இந்தியா தரைச் சீலை இந்தியா உருஷ்மி சக்ரவர்த்தி 4–6, 2–6
இரண்டாம் இடம் 17. 18 அக்டோபர் 2008 லாகோஸ் ஓபன், நைஜீரியா கடினத் தரை பெல்ஜியம் டமரின் ஹெண்ட்லர் 3–6, 6–2, 3–6
வெற்றியாளர் 18. 1 சூன் 2009 ஐடிஎஃப் புது தில்லி, இந்தியா கடினத் தரை சீனா ஹே சுன்யான் 6–3, 6–2

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அங்கிதா பாம்பிரியின் சகோதரி சனா பாம்ப்ரி, சகோதரர் யூகி பாம்ப்ரி, உறவினர்களான பிரேர்னா பாம்ப்ரி, பிரதீக் பாம்ப்ரி ஆகியோரும் தொழில்முறை டென்னிசு வீரர்களாக உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Srinivasan, Kamesh (11 June 2020). "Fed Cup coach Ankita discusses the Bhambri formula for success". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). Sportstar. Retrieved 2021-01-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கிதா_பாம்பிரி&oldid=4560104" இலிருந்து மீள்விக்கப்பட்டது