அங்காரா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ankara Province
Ankara ili
Province of Turkey
Location of Ankara Province in Turkey
Location of Ankara Province in Turkey
ஆள்கூறுகள்: 39°36′N 32°30′E / 39.600°N 32.500°E / 39.600; 32.500ஆள்கூறுகள்: 39°36′N 32°30′E / 39.600°N 32.500°E / 39.600; 32.500
CountryTurkey
RegionWest Anatolia
SubregionAnkara
அரசு
 • Electoral districtAnkara
 • GovernorVasip Şahin
பரப்பளவு
 • Total25,706 km2 (9,925 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • Total55,03,985
 • அடர்த்தி210/km2 (550/sq mi)
தொலைபேசி குறியீடு0312
வாகனப் பதிவு06

அங்காரா மாகாணம் (துருக்கியம்: Ankara ili) என்பது துருக்கி நாட்டின் ஓர் மாகாணமாகும். இங்கு துருக்கியின் தலைநகரான அங்காரா உள்ளது .

புள்ளிவிவரங்கள்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1927 404,720 —    
1940 602,965 0.02%
1950 819,693 0.02%
1960 1,321,380 0.02%
1970 2,041,658 0.02%
1980 2,854,689 0.02%
1990 3,236,626 0.01%
2000 4,007,860 0.01%
2010 4,771,716 0.01%
2019 5,639,076 0.01%
source:[2][3]

வரலாறு[தொகு]

பழங்கால மற்றும் பாரம்பரிய காலங்களை சேர்ந்த பல வரலாற்று ரீதியான அனடோலிய நாகரிகங்களை சேர்ந்த பல குழுக்கள் அதிகம் குடியேற்றங்கள் நடந்த நவீன நகரத்தின் தளம் இடமாக உள்ளது. இங்கு ஃபிரைஜியன்ஸ், லிடியன்ஸ், பெர்சியர்கள் மற்றும் பேரரசர் அலெக்சாந்தர், ரோமானியர்கள் மற்றும் கலாத்தியர்கள் உட்பட பலர் இங்கு குடியேற்றம் செய்துள்ளனர். அங்காரா நகரம் பைசாண்டின்களின் கோட்டையாக இருந்துள்ளது; இது செல்யூக் துருக்கியர்களிடமும் பின்னர் ஒட்டோமான் பேரரசிடமும் கைவசமானது. இது இறுதியாக துருக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் முஸ்தபா கெமல் மற்றும் துருக்கிய தேசிய இயக்கத்தால் 1920 இல் தற்காலிக அரசாங்கத்தின் கீழ் வந்தது. பிறகு துருக்கிய நாடாளுமன்றத்தின் அங்கமாகவும், 1923 இல் புதிதாக நிறுவப்பட்ட துருக்கி குடியரசின் தலைநகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மாவட்டங்கள்[தொகு]

அங்காரா மாவட்டங்கள்

அங்காராவில் 25 மாவட்டங்கள் உள்ளன. [4]

நிலவியல்[தொகு]

அங்காராவின் பெரும்பகுதி மத்திய அனடோலியா பிராந்தியத்திலும், சிறிதளவு கருங்கடல் பிராந்தியத்திலும் அமைத்திருக்கும். அங்காராவில் வடக்கே மலை காடுகளும், தெற்கே கொன்யாவின் வறண்ட சமவெளியும் உள்ளது. கிசில்மக், சாகர்யா நதி அமைப்புகள், சரயார் நீர்த்தேக்கம் மற்றும் பல இயற்கை ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றால் இந்த மாகாணம் பாசனம் செய்யப்படுகிறது. 50% நிலம் விவசாயத்திற்கும், 28% காடு, மற்றொரு 10% புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. துருக்கியின் இரண்டாவது பெரிய ஏரியான துஸ் ஏரியின் சில பகுதிகள் மாகாணத்தின் செரெஃப்லிகோஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாகாணத்தின் மிக உயரமான இடம் கோசல்கஹம் மாவட்டத்தில் உள்ள ஐக் மலை ஆகும். இதன் உயரம் 2,015 மீட்டர்.

காலநிலை[தொகு]

இங்கு கோடையில் வெப்பமாகவும், வறண்டதுமாகவும், வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலும் மழை பொழிவுமாகவும், குளிர்காலத்தில் குளிர்ராகவும் மற்றும் பனி பொழிவுமாகவும் இருக்கும். மாகாணத்தின் தெற்கே வறண்ட சமவெளிகளை விட வடக்கில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். மாகாணத்தின் மையத்தில் அமைந்துள்ள அங்காரா நகரில் வருடாந்திர மழையளவு 415 மி.மி (1.362 அடி), [5] மாகாணத்தின் வடக்கே அமைந்துள்ள கோசல்கஹாமத்தின் வருடாந்திர மழையளவு 592 மி.மி (1.942 அடி) மற்றும் மாகாணத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள சேரேபிளிக்கொசிசரின் வருடாந்திர மழையளவு 357 மி.மி. (1.171 அடி) ஆகும். [6] [7]

  1. "Population of provinces by years - 2000-2018". 9 மார்ச் 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. Genel Nüfus Sayımları
  3. tuik
  4. "The Results of Address Based Population Registration System, 31-12-2017". Turkish Statistical Institute. 1 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Ankara" (Turkish). Turkish State Meteorological Service. 8 January 2016 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  6. "Kizilcahamam-Turkey". Weatherbase. 14 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Coğrafi Yapı". Sereflikochisar.gov.tr. 22 October 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காரா_மாகாணம்&oldid=3030118" இருந்து மீள்விக்கப்பட்டது