அங்கம்பாக்கம் அம்பலவாணீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு அம்பலவாணீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:அங்கம்பாக்கம், உத்திரமேரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உத்திரமேரூர்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
மூலவர்:அம்பலவாணீஸ்வரர்
தாயார்:சிவகாம சுந்தரி
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ் வருடப்பிறப்பு, கந்தசஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அங்கம்பாக்கம் அம்பலவாணீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், அங்கம்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் அம்பலவாணீஸ்வரர், சிவகாம சுந்தரி சன்னதிகளும், பிள்ளையார், முருகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் கந்தசஷ்டி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]