அங்கப்பா கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கப்பா கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்1997
அமைவிடம், ,

அங்கப்பா கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். 1997ஆம் ஆண்டில் டி. வி. அங்கப்பன் என்பவரால் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது.[1][2] இக்கல்லூரி, கலை அறிவியல் பாடங்களில் இளநிலைப் பட்டங்களையும், முதுகலைப் பட்டங்களையும் வழங்கி வருகிறது.[3]

அமைவிடம்[தொகு]

அங்கப்பா கலை அறிவியல் கல்லூரியானது, கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் சீரபாளையத்தில் அமைந்துள்ளது.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]