உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கணாமைக்கடவை கண்ணகியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கணாமைக்கடவை கண்ணகியம்மன் கோயில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அங்கணாக்கடவை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகத்தில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் வழியில் மாகையம்பதியில் அமைந்துள்ளது.

இக்கோயில் ஈழத்தில் தோன்றிய கண்ணகி கோயில்களில் பழமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பொங்கல் மிகச் சிறப்பாக நடைபெறும். அந்நாட்களில் பக்தர்கள் நெடுந்தொலைவில் இருந்து இங்கு வந்து பொங்குவர். தினமும் பூசைகள் இடம்பெறும். கண்ணகி கதை படிப்பும் குளிர்த்தியும் மிகச்சிறப்பாக நடைபெறும்.