அக்ரோகார்டைட்டு
அக்ரோகார்டைட்டு Akrochordite | |
---|---|
![]() பிரகாசமான பச்சையில் பளபளப்பான ஈவைட்டு கொத்து (0.5 மி.மீ) மற்றும் பழுப்பு நிறத்தில் அக்ரோகார்டைட்டு முரணாகத்தெரியும் இளஞ்சிவப்பு நிறம், கார்பனேட்டு மணி அணிகள் | |
பொதுவானாவை | |
வகை | Phosphate minerals |
வேதி வாய்பாடு | (Mn,Mg)4(AsO4)2(OH)4.4H2O |
இனங்காணல் | |
நிறம் | மஞ்சள் கலந்து செம்பழுப்பு, வெளிரிய முதல் அடர் பழுப்பு, வெளிரிய இளஞ்சிவப்பு |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | {010} இல் சரியான பிளவு , முதலாவதற்கு செங்குத்தாக இரண்டாவது. |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 3 1⁄2 |
மிளிர்வு | கண்ணாடி போன்ற பளபளப்பு, பிசின் தன்மை, மந்தமானது |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
மேற்கோள்கள் | [1][2][3] |
அக்ரோகார்டைட்டு (Akrochordite) என்பது (Mn,Mg)4(AsO4)2(OH)4.4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் மிகவும் அரிய ஒரு கனிமச் சேர்மமாகும். நீரேறிய ஆர்சனேட்டு கனிமமாக இந்நீரேற்று கனிமம் கருதப்படுகிறது. இயற்கையில் அரிதாகக் காணப்படும் மாங்கனீசு ஆர்சனேட்டுகளின் சிறிய கனிமக்குழு வகையின் பிரதிநிதியாக அக்ரோகார்டைட்டு திகழ்கிறது. இதேபோல இளஞ்சிவப்பு நிறத்தை பெற்று மாங்கனீசு தனிமத்தைக் கொண்டுள்ள பிற மாங்கனீசு ஆர்சனேட்டு கனிமங்களின் பிரதிநிதியாகவும் இது கருதப்படுகிறது. குறிப்பாக பல்லுருத்தோற்ற மாங்கனீசு படிவுகளுடன் அக்ரோகார்டைட்டு தொடர்பு கொண்டுள்ளது [2][4].