அக்ரிபிளேவின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்ரிபிளேவின் என்னும் கரிமச் சேர்மம் அக்ரினுடைய பெறுதிகளில் பயன்மிக்க சேர்மமாகும். முதலாம் உலகப் போரின்போது தொற்றுக் காயங்களை ஆற்றும் நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுத்தப்பட்டது. அக்ரிஃபிளேவின் அறுவை சிகிச்சைக்கு முன்னர் தோலைத் துப்புரவாக்கும் தொற்று நீக்கியாகவும், மேகவெட்ைட நோய் போன்றவற்ைற குணப்படுத்துவற்கும் பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் உறக்க நோயினை உண்டு பண்ணும். குருதி ஒட்டுயிர்கள் என்னும் நுண்ணுயிரினத்தை அழிக்கும் ஆற்றல் உடையது. இச்சேர்மம் ஒரு சீழ் எதிர்ப்பியாகப் பயன்படுகிறது.

பொதுப்பண்புகள்[தொகு]

 செம்பழுப்பு நிறமுடைய சிறிய படிக வடிவில் இருக்கும். மஞ்சள் நிறமுடையது. விலை உயர்ந்தது.இது நிலக்கரி தாரிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
  1. மேற்கோள்:
    Finar I.L., Organic Chemistry vol I, ELBS,London, 1973

தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு: 63-1

 நூல்: அறிவியல் களஞ்சியம் தொகுதி -1. பக்கம் -18

பதிப்பாசிரியர்: பி.எல்.சாமி.

முதற்பதிப்பு: 1986

மறுபதிப்பு: 2006

பகுப்பு : வேதியியல் - கரிம வேதியியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரிபிளேவின்&oldid=2723348" இருந்து மீள்விக்கப்பட்டது