உள்ளடக்கத்துக்குச் செல்

அக்ராணி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்ராணி ஆறு
Agrani River (अग्रणी नदी)
Map
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம், கருநாடகம்
மாவட்டம்சாங்கிலி
பெல்காம்
நகரம்சிர்தோன் (शिरढोण), கிங்காங்கோன் (हिंगणगाव), சாம்பார்கி (संबरगी)
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்கிருஷ்ணா ஆறு
  ஆள்கூறுகள்
16°39′41″N 74°57′50″E / 16.6614°N 74.9640°E / 16.6614; 74.9640
நீளம்97 km (60 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
நதி அமைப்புகிருஷ்ணா ஆறு

அக்ராணி ஆறு (Agrani River) என்பது மகாராட்டிராவில் சாங்கிலி மாவட்டத்தின் கானாபூர் வட்டத்தில் உள்ள கானாபூர் பீடபூமியில் உள்ள பால்வாடி (बलवडी) அருகே, அகத்திய முனிவரின் (अगस्त्य ऋषी) ஒரு சிறிய மரக் கோயிலுக்கு அருகில் உருவாகிறது. வஜ்ரச்சவுண்டே (वज्रचौंडे) (தஸ்கான் தாலுகா)க்குப் பிறகு, இது திரும்பி தென்கிழக்கு திசையில் பாய்கிறது.

சாங்லி மாவட்டத்தில் அக்ராணி ஆறு 62 கி.மீ. தூரத்திற்கு பயணிக்கிறது (கானாபூர் தாலுகா- 22.5 கி.மீ; தாஸ்கான் தாலுகா- 14 கி.மீ; கே.எம். தாலுகா- 25.5கி.மீ). இதன் பிறகு, கருநாடகாவில் அதானி கிராமத்திற்கு அருகில் இறுதியாக கிருஷ்ணா ஆற்றில் இணைகிறது. அக்ராணி வறட்சியால் பாதிக்கப்படும் கவத்தே மகான்கல் வட்டத்தின் உயிர்நாடியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு ஒரு பெரிய தூர்வாரும் திட்டத்திற்கும் உட்பட்டுள்ளது.[1][2]

அக்ராணி ஆறு புனரமைப்பு திட்டம் ஜல்யுக்த் சிவார் அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இழந்த ஆற்றை அதன் தோற்றத்தில் புத்துயிர் பெறசெய்வதில் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Villagers, NGO join to revive Agrani river". The Times of India. 3 April 2013. https://timesofindia.indiatimes.com/city/pune/Villagers-NGO-join-to-revive-Agrani-river/articleshow/19353684.cms.
  2. "Sangli: 107 villages join hands to rejuvenate Agrani River Basin". 1 April 2017.
  3. Janata Darbar (2015-10-07), Janata Darbar JD EP. 145- Agrani Nadi cleaning, retrieved 2017-12-31
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ராணி_ஆறு&oldid=4429995" இலிருந்து மீள்விக்கப்பட்டது