அக்ரம் ராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்ரம் ராசா
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 9 49
ஓட்டங்கள் 153 193
துடுப்பாட்ட சராசரி 15.30 17.54
100கள்/50கள் -/- -/-
அதிகூடிய ஓட்டங்கள் 32 33*
பந்துவீச்சுகள் 1526 2601
வீழ்த்தல்கள் 13 38
பந்துவீச்சு சராசரி 56.30 42.39
5 வீழ்./ஆட்டப்பகுதி - -
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு 3/46 3/18
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 8/- 19/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

மொகம்மட் அக்ரம் ராசா (Mohammad Akram Raza, உருது: محمد اکرم رضا பிறப்பு: நவம்பர் 22 1964, முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989 இலிருந்து 1995 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

தனது பெரும்பான்மையான ஆட்டங்களை சலீம் மாலிக்கின் தலைமையிலேயே ஆடியுள்ளார். அந்த நேரத்தில் பாக்கித்தான் அனைத்து போட்டிகளிலும் வெற்றி கண்டதாலேயே இவர் தொடர்ந்து அணியில் இருக்க முடிந்தது. 2000ஆம் ஆண்டு மாலிக் மொகமது கய்யாம் அறிக்கையில் வசீம் அக்ரமுடன் குற்றம் சாட்டப்பட்டு பெரும் அபராதம் விதிக்கப்பட்டார். இவரது அணித்தலைவராக இருந்த சலீம் மாலிக் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் வாழ்நாள் தடை பெற்றார். பின்னர் ராசா பாக்கித்தானின் உள்நாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினார்.

2011: சட்டப் புறம்பான பணையச் சூதாடலுக்காக கைது[தொகு]

மே 15, 2011 ஞாயிறன்று லாகூர் அங்காடி மாளிகையொன்றில் பஞ்சாப் (பாக்கித்தான்)|பஞ்சாப் காவல்துறை நடத்திய சோதனையில் ஆறு பேர்களுடன் ராசா கைது செய்யப்பட்டார். இவர்கள் எழுவரும் இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களை வைத்து சூதாடியதாக குற்றம் சுமத்தியுள்ள காவல்துறை கைபேசிகள், கணினிகள், தொலைக்காட்சிப்பெட்டிகள் மற்றும் மிகுந்த பணம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.espncricinfo.com/pakistan/content/current/story/515170.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரம்_ராசா&oldid=2714267" இருந்து மீள்விக்கப்பட்டது