அக்ரகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்சிண சித்ராவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு திருநெல்வேலி அக்ரகாரம்
கேரளத்தின் கல்பாதி அக்ரகாரம்

அக்ரகாரம் (Agraharam) அக்ராரம், அக்ரஹாரம், அகரம் என பலவகையில் தென்னிந்தியாவில் அழைக்கப்படுவது பிராமணர் குடியிருப்பான பாரம்பரிய பகுதியாகும். அக்ரகாரம் பழங்காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. இவை கடோகா மற்றும் போயா என்றும் சிலபகுதிகளில் அழைக்கப்படுகின்றன.[1]

பொதுவாக அக்ராரம் என்பது கோயிலைச் சுற்றி ஒரு மாலை போன்று, தெருவின் இருபுறங்களிலும் வீடுகளைக் கொண்டும், கிராமத்தின் மையத்தில் கோயிலைக் கொண்டும் இருக்கும். இதனால் கோயிலைச் சுற்றி மாலைபோல குடியிருப்புகள் அமைந்திருக்கும். கட்டடக்கலை மற்றும் நகர-திட்டமிடல் ஆகியவை பாரம்பரிய இந்து கட்டடக்கலையைக் கொண்டதாக இருக்கும். ஒரு அக்ரகாரமானது தெருவின் இரு புறமும் வடக்கு தெற்காக இரு வரிசையில் வீடுகளைக் கொண்டதாகவும்., ஒரு இறுதியில் சிவன் கோயிலைக் கொண்டும் மற்றும் மறு இறுதியில் விஷ்ணு கோவிலைக் கொண்டு இருக்கும். இதற்கு ஒரு நல்ல எடுதுக்காட்டு தமிழ்நாட்டில் உள்ள வடிவீஸ்வரம் ஆகும்.

பிராமணர்கள் அக்ரகாரங்களைவிட்டு நகர்ப்புற பகுதிகளுக்கு தொழில்கள் மற்றும் வேலைகள் நிமித்தமாக வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர். இதனால் அக்கிரகாரத்து, பாரம்பரிய வீடுகள் வேகமாக மறைந்து பல கற்காரைக் கட்டடங்களாக மற்றும் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன. பல்லவ காலத்தில் வேதங்களைப் பின்பற்றியதிலிருந்து, தென்னிந்தியாவில் அக்ரஹாரங்கள் தொடங்கப்பட்டன.

வரலாறு[தொகு]

அக்கரகாரம் குறித்த பழங்கால விளக்கம் சங்க கால நூலான பெரும்பாணாற்றுப்படையில் உள்ளது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. P. 266 Precolonial India in Practice : Society, Region, and Identity in Medieval Andhra: Society, Region, and Identity in Medieval Andhra By Austin Cynthia Talbot Assistant Professor of History and Asian Studies University of Texas
  2. P. T. Srinivasa Iyengar (1929). History of the Tamils from the Earliest Times to 600 A. D.. பக். 388–389. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரகாரம்&oldid=3297323" இருந்து மீள்விக்கப்பட்டது