அக்பர் ஜெகன் அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்பர் ஜெஹான் அப்துல்லா (Akbar Jehan Abdullah) (1916 - 11 ஜூலை 2000) ஒரு இந்தியக் காஷ்மீர் அரசியல்வாதியாவார்.[1] ஜம்மு-காஷ்மீரில் மூன்று முறை முதல்வராக இருந்த சேக் அப்துல்லாவின் மனைவியாவார். இவர் இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[2]

அக்பர் ஜெஹான், ஸ்ரீநகரிலுள்ள நெடோ விடுதி உரிமையாளரும், தனது காஷ்மீரி மனைவி மிர்ஜன் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு இந்திய விடுதி சங்கிலியின் ஐரோப்பிய உரிமையாளரின் மூத்த மகனான மைக்கேல் ஹாரி நெடோவின் மகளாவார். நெடோ குல்மார்க்கில் ஒரு சுற்றுலா விடுதியின் உரிமையாளராகவும் இருந்தார்.[3] 1933 ஆம் ஆண்டு அக்பர் ஜெகன் அப்துல்லாவை திருமணம் செய்து கொண்டார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

அக்பர் ஜெஹான், 1977 முதல் 1979 வரை [[ஆறாவது மக்களவை|ஆறாவது மக்களவையிலும் [4] 1984 முதல் 1989 வரை எட்டாவது மக்களவையிலும்[5] முறையே காஷ்மீரின் ஸ்ரீநகரையும், அனந்தநாக் தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

செஞ்சிலுவை சங்கத் தலைவர்[தொகு]

1947 முதல் 1951 வரை ஜம்மு-காஷ்மீர் செஞ்சிலுவை சங்கத்தின் முதல் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றார். 1975 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் ஆண்டு மாநிலக் குழுவின் தலைவராகவும், அகில இந்திய குடும்ப நலச் சங்கத்தின் தலைவராகவும், 1976இல் நடந்த அகில இந்திய மகளிர் மாநாடு, 1977 இல்நடந்த மாநில கிளையின் தலைவராகவும் இருந்தார்.

பிற்கால வாழ்க்கையும் மரணமும்[தொகு]

ஜெஹன் அப்துல்லா 11 ஜூலை 2000 அன்று ஸ்ரீநகரில் தனது 84 வயதில் இறந்தார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் காஷ்மீர் அரசியல்வாதியான பாரூக் அப்துல்லாவின் தாயும், உமர் அப்துல்லாவின் பாட்டியுமாவர். பாரூக் அப்துல்லா தனது தந்தை சேக் அப்துல்லாவிற்குப் பிறகு 1982 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சரானார்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Vajpayee invites CM for talks, Farooq’s mother laid to rest". The Tribune (Chandigarh). 11 July 2000. http://www.tribuneindia.com/2000/20000712/main1.htm. 
  2. "Archived copy". 27 June 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 December 2016 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  3. Sheikh Abdullah; M.Y.Taing (1985), p193
  4. "Archived copy" (PDF). 18 சூலை 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  5. "Archived copy" (PDF). 18 சூலை 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)