அக்பர் அலி
Appearance
அக்பர் அலி Akbar Ali | |
---|---|
பிறப்பு | கானாபூர், பெல்காம், கருநாடகம், இந்தியா | 3 மார்ச்சு 1925
இறப்பு | 21 பெப்ரவரி 2016 குவெம்புநகர், மைசூர், Karnataka, இந்தியா | (அகவை 90)
தேசியம் | இந்தியர் |
பணி | கவிஞர் |
அக்பர் அலி (Akbar Ali) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். கன்னட மொழிக் கவிஞரான இவர் 1925 ஆம் ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் தேதியன்று பிறந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பெல்காம் மாவட்டத்தின் கானாபூர் வட்டம் உல்லகாத்தி கிராமத்தில் அமீர்பி மற்றும் அப்பா சாகிப் தம்பதியருக்கு மகனாக அக்பர் அலி பிறந்தார்.[1] இவருக்கு 1967 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் சுமன சௌரபா என்றழைக்கப்படும் - கர்நாடக மாநில சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் அக்பர் அலி கர்நாடக சட்டமன்ற கவுன்சில் உறுப்பினரானார்.[2][3][4]
இறப்பு
[தொகு]2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று குவெம்புநகரில் உள்ள தனது இல்லத்தில் தைராய்டு புற்றுநோயால் அக்பர் அலி இறந்தார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.[1][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kumar, R. Krishna (2016-02-22). "Poet Akbar Ali dead" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/news/national/karnataka/poet-akbar-ali-dead/article8265832.ece.
- ↑ Datta, Amaresh (2006). The Encyclopaedia Of Indian Literature (Volume One - A To Devo). Vol. 1. சாகித்திய அகாதமி. p. 116. ISBN 978-81-260-1803-1.
- ↑ Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. சாகித்திய அகாதமி. pp. 28–29. ISBN 978-81-260-0873-5.
- ↑ "Poet Akbar Ali, Known for Limericks, Dies at 91". The New Indian Express. 22 February 2016. http://www.newindianexpress.com/states/karnataka/2016/feb/22/Poet-Akbar-Ali-Known-for-Limericks-Dies-at-91-895366.html. பார்த்த நாள்: 20 August 2019.
- ↑ "Poet Akbar Ali, Known for Limericks, Dies at 91". The New Indian Express. Retrieved 2020-03-22.
.