அக்னோசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நுண்ணுணர்விழப்பு (Agnosia) என்பது உணரும் தகவல்களை செயல்படுத்த இயலா நிலையைக் குறிக்கும் ஓர் குறைபாடாகும். அக்னோசியா என்ற பெயராலும் இக்குறைபாடு அறியப்படுகிறது. பெரும்பாலும் இக்குறைபாட்டினால் பொருள்கள், நபர்கள், ஒலிகள், வடிவங்கள் அல்லது வாசனையை அடையாளம் காணும் திறனை இழக்க நேரிடுகிறது. குறிப்பிட்ட உணர்வுப் புலன் குறைபாடும் இல்லாமல் அல்லது குறிப்பிடத்தக்க நினைவு இழப்பும் இல்லாமல் இத்தகைய நுண்ணுணர்விழப்பு நிலை ஏற்படுகிறது [1]. மூளையில் காயம் அல்லது நரம்பியல் கோளாறு காரணமாக இக்குறைபாடு தோன்றுகிறது. குறிப்பாகத் தலையின் பின்புறத்திலுள்ள மூளைமடலின் கீழ்ப்பகுதியில் உண்டாகும் சேதத்தினால் இக்குறைபாடு தோன்றுகிறது [2].

நுண்ணுணர்விழப்பு பொதுவாக பார்த்தல் அல்லது கேட்டல் [3] போன்ற ஓர் ஒற்றை நடைமுறையை மட்டுமே பாதிக்கிறது [4]. புலனறி உணர்வுத் தகவல்களை முன் பின்னாக கையாளுவதில் சிக்கல் ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன [5].

இக்குறையின் வகைகளாவன:

  • காட்சி துண்டலுக்கு பொருள் உணர இயலாமை
  • கேட்டு பொருள் உணர இயலாமை
  • படம் பார்த்து பொருள் உணர இயலாமை
  • வார்த்தை உணர்ந்து பொருள் உணர இயலாமை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னோசியா&oldid=3187445" இருந்து மீள்விக்கப்பட்டது