அக்னி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்னி இலங்கை, கொழும்பு, பம்பலப்பிட்டியிலிருந்து வெளிவந்த ஓர் மாதாந்த சிற்றிதழாகும். இதன் முதல் இதழ் 1975 சூலை மாதம் வெளிவந்துள்ளது. கவிஞர் ஈழவாணனை ஆசிரியராகக் கொண்டு இது வெளி வந்தது.

பணிக்கூற்று[தொகு]

  • மனிதாபிமானப் பண்பாடுகளின் முற்போக்குச் சிந்தனை களம்

ஆசிரியர்[தொகு]

உள்ளடக்கம்[தொகு]

32 பக்கங்களில் வெளிவந்துள்ள இவ்விதழில் அதிகமான பக்கங்கள் புதுக்கவிதைகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சி பற்றியே குறிப்பிட்டிருந்தது. எனவே, இதனை ஒரு கவிதை இதழாகவும் குறிப்பிடலாம். முதல் இதழின் விலை 95 சதம். இலங்கையில் வளர்ந்து வரும் கவிஞர்களதும், வளர்ந்த கவிஞர்களதும் பல கவிதைகள் இடம்பெற்றிருந்தன.

அக்னி ஐந்து இதழ்கள் மட்டுமே வெளிவந்த பொழுதும், அன்றைய காலகட்டத்தில் தனித்துவமான ஈழத்தில் பல புதுக்கவிதையாளர்கள் உருவாக வழி வகுத்த ஒரு சஞ்சிகையாக திகழ்ந்தது. கவிதைக்கென வெளிவந்த சஞ்சிகையாக அறிவிக்கப்பட்டாலும் புதுக்கவிதை மட்டுமல்லாது நூல் விமர்சனம், திரைப்படம், ஓவியம், போன்ற பல்வேறு துறைச் சார்ந்த கட்டுரைகளையும் அது வெளியிட்டது. அதன் ஐந்தாவது இதழ் கறுப்பின மக்களின் கவிதை இலக்கிய சிறப்பிதழாக வெளிவந்தது. அச்சிறப்பிதழில் முருகையன், எம். ஏ. நுஃமான், கே. எஸ். சிவகுமாரன், பண்ணாமத்துக் கவிராயர் போன்றவர்களின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் கறுப்பின மக்களின் கவிதைகள் இடம் பெற்று இருந்தன.

Noolagam logo.jpg
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி_(இதழ்)&oldid=2266576" இருந்து மீள்விக்கப்பட்டது