உள்ளடக்கத்துக்குச் செல்

அக்னிவேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்னிவேஷ்
Agnivesh
अग्निवेश
பிறப்பு21 செப்டம்பர் 1939 (1939-09-21) (அகவை 84)
இந்தியா ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம்
இறப்பு11 செப்டம்பர் 2020(2020-09-11) (அகவை 80)[1]
புது தில்லி
தேசியம்இந்தியர்
பணிசமூக செயற்பாட்டளர், அறிஞர், அரசியல்வாதி

அக்னிவேஷ் (Agnivesh), பிரபலமாக சுவாமி அக்னிவேஷ் ( பிறப்பு 21 செப்டம்பர் 1939 -11 செப்டம்பர் 2020[2]) என அறியப்படுபவர் இந்திய அரசியல்வாதி மற்றும் அரியானா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஆரிய சமாஜ அறிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆவார். 1981இல் நிறுவப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை முன்னணி மூலம் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை எதிர்த்துப் போராடியதற்காக இவர் நன்கு அறியப்படுகிறார். 1875 ஆம் ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட ஆரிய சமாஜ இயக்க உலக மன்றத்தின் தலைவராக (2004-2014) இருந்தார்.[3] மேலும் 1994 முதல் 2004 வரை ஐக்கிய நாடுகள் அவையின் அடிமைத்தனத்திற்கு எதிரான தன்னார்வ அறக்கட்டளை நிதியத்தின் தலைவராக பணியாற்றினார்.[4][5]

துவக்க வாழ்கை

[தொகு]

அக்னிவேஷ் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் 1939 செப்டம்பர் 21 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் வேப ஷியாம் ராவ். இவர் நான்காவது வயதில் தந்தையை இழந்தார். பின்னர் தற்கால சத்தீஸ்கர் மாநிலப் பகுதியில் இருந்த சக்தி என்ற சுதேச அரசின் திவானாக இருந்த அவரது தாய்வழி தாத்தாவால் வளர்க்கப்பட்டார். அங்கு சட்டம், வணிகப் பிரிவில் பட்டப்படிப்புகளை முடித்தார். கொல்கத்தாவிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பிற்காலத்தில் பணியாற்றிய சப்யாசச்சி முகர்ஜியிடம், இளம் வழக்கறிஞராக சில காலம் பணிபுரிந்தார்.[6]

அரசியல்

[தொகு]

1970 ஆம் ஆண்டு அக்னிவேஷ் ஆரிய சமாஜத்தின் கொள்கைகளை அடிப்படை சித்தாந்தமாக கொண்டு ஆர்யா சபா என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.[7]

1977 ஆம் ஆண்டு அரியானா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1979 இல் கல்வி அமைச்சராக பணியாற்றினார் .[8] 1981 இல், அமைச்சராக இருந்த போது, கொத்தடிமைத் தோழிலாளர் விடுதலை முன்னணியை நிறுவினார், இது இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரலெழுப்பி வருகிறது, குறிப்பாக தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இது செயல்பட்டு வருகிறது. இவர் இந்த அமைப்பின் தலைவராக இவர் உள்ளார்.[9] அமைச்சரவையை விட்டு வெளியேறியபின், அவர் இருமுறை கைது செய்யப்பட்டார். கொலைக் குற்றச்சாட்டின்பேரில் 14 மாதங்கள் சிறைதண்டனை அனுபவித்தார். பின்னர் அவர் அதில் விடுவிக்கப்பட்டார்.[10]

2011 மார்ச்சில், மாவோயிச படையானது சத்தீஸ்கர் பாதுகாப்பு மற்றும் காவல்துறை படையினரில் மூன்று பேரைக் கொன்றது; அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் மாவோவிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். சுவாமி அக்னிவேசும் அவரது அமைப்பினரும் பாதிக்கப்பட்ட கிராமக் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க முயன்ற போது, அவர்களைத் தடுக்கும் விதமாக மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் பலரின் இறப்புக்கு காரணமானவர்கள் என்று கூறி அவர்களது மகிழுந்துகளை ஒரு பெரிய ஆர்பாட்டக் குழுவானது கற்களை வீசி தாக்கியது.[11]

2011 ஆகத்து மாதம் இந்தியாவில் ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் சுவாமி அக்னிவேஷ் கலந்துகொண்டார். இந்த இயக்கத்தில் அன்னா குழுவில் முக்கியஸ்தராக இடம் பெற்றிருந்த அக்னிவேஷ். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அக்குழுவில் இருந்து வெளியேறினார்.

பாஜகயினரின் தாக்குதல்

[தொகு]

புரி ஜெகன்னாதர் கோயிலில் வழிபட இந்துக்கள் அல்லாதோருக்கும் அனுமதி தரவேண்டும் என்று சுவாமி அக்னிவேஷ் கூறியதால் இவரை இந்துக்களின் எதிரி என்று இந்துத்துவ அமைப்பினர் விமர்சனம் செய்தனர். இந்திலையில் 2018 சூலை 17 அன்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலிருந்து 360 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பாக்கூரின், லிட்புரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சுவாமி அக்னிவேஷ் வந்தார். அப்போது பாஜக யுவ மோர்ச்சா (பிஜேஒய்எம்) பிரிவினர் இவரை தாக்கி உதைத்தனர்.[12]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளல்

[தொகு]

அக்னிவேஷ் பிக் பாஸ் வீட்டில் விருந்தினராக 2011 நவம்பர் 8 முதல் 11 வரை மூன்று நாட்கள் இருந்தார்.[13][14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Renowned social activist Swami Agnivesh passes away". The Indian Express. 11 September 2020. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.
  2. "Social activist and former MLA Swami Agnivesh passes away". தி எகனாமிக் டைம்ஸ். 11 September 2020. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.
  3. About Agnivesh பரணிடப்பட்டது 26 சூலை 2009 at the வந்தவழி இயந்திரம் agnimanthan.com.
  4. "Annual Report 2002" (PDF). UNHCR. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.
  5. Agnivesh – Profile Holy People of the World: A Cross-cultural Encyclopedia, by Phyllis G. Jestice, ABC-CLIO, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57607-355-6. Page 25
  6. http://www.swamiagnivesh.com/life-journey.php
  7. Swami Agnivesh (India), Joint Honorary Award with Asghar Ali Engineer (2004)- Profile பரணிடப்பட்டது 2008-12-02 at the வந்தவழி இயந்திரம் Right Livelihood Award Official website.
  8. Swami Agnivesh – Profile in New Slavery: A Reference Handbook, by Kevin Bales, ABC-CLIO, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-815-1.Page 71-72.
  9. Children in Debt Bondage Children Enslaved, by Roger Sawyer. Published by Taylor & Francis, 1988. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-00273-7. Page 55-57.
  10. "The Swami Agnivesh". Late Night Live. Radio National, part of the Australian Broadcasting Corporation. 23 January 2002. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.
  11. John, Joseph (27 March 2011). "Dantewada mob attacks Agnivesh; SSP, DM shifted". India Express இம் மூலத்தில் இருந்து 28 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111228170702/http://www.expressindia.com/latest-news/Dantewada-mob-attacks-Agnivesh-SSP-DM-shifted/767849/. பார்த்த நாள்: 14 June 2011. 
  12. "சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்: ஜார்க்கண்டில் பாஜகவினர் 20 பேர் கைது". செய்தி. இந்து தமிழ். 17 சூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2018.
  13. "I'm not an entertainment material: Swami Agnivesh". Times of India. 8 November 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/tv/Im-not-an-entertainment-material-Swami-Agnivesh/articleshow/10653736.cms. 
  14. http://www.ndtv.com/album/listing/entertainment/swami-agnivesh-enters-bigg-boss-5-11480
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னிவேஷ்&oldid=3576381" இலிருந்து மீள்விக்கப்பட்டது