உள்ளடக்கத்துக்குச் செல்

அக்னிவேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்னிவேசர் (சமக்கிருதம்: अग्निवेश, Agniveśa) என்பவர் ஒரு புகழ்பெற்ற ரிஷிகளில் (முனிவர்களில்) ஒருவர். இவர் ஆயுர்வேத மருத்துவம் பற்றி எழுதிய பழைய நூலாசிரியர்களில் ஒருவர் [1] இவர் ஆத்ரேய புனர்வசு முனிவரின் (ஆயுர்வேத மருத்துவத்தின் முன்னோடி) மாணவர். ஆத்ரேயரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட அக்னிவேஷ் தந்திரம் (அல்லது அக்னிஷ் சம்ஹிதை) என்னும் தற்போது கிடைக்காத ஆயுர்வேத உரையை இயற்றினார். மேலும் அக்னிவேசர் துவக்கிய மருத்துவப் பள்ளி அவர் இயற்றிய அக்னிவேச சம்ஹிதை என்ற நூலை அடிப்படையாக கொண்டு இயங்கியது. துவக்ககால ஆறு ஆயுர்வேத பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். (மற்றவை பராஷரா, ஹரீதா, பீலா, ஜதுர்கர்னா மற்றும் க்ஷர்பானி).   

சரக சம்ஹிதை உரையில்: "இந்த தந்திரம் (அக்னிவேசா) அக்னிஷ்சாரால் எழுதப்பட்டு, சரகரால் திருத்தப்பட்டு, சரக சம்ஹிதை உருவாகியது" என குறிப்பிடுகிறது.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Dowson, John (1984) [1879]. A Classical Dictionary of Hindu Mythology, and Religion, Geography, History. Calcutta: Rupa & Co. p. 8.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னிவேசர்&oldid=3311943" இலிருந்து மீள்விக்கப்பட்டது