அக்சைய் குமார் பரல்
அக்சைய் குமார் பரல் Akshay Kumar Boral | |
|---|---|
| பிறப்பு | 1860 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா |
| இறப்பு | 19.06.1919 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா |
| பணி | கவிஞர் |
| உறவினர்கள் | அமல் தத்தா (பெயரன்)[1][2] |
அக்சைய் குமார் பரல் (Akshay Kumar Baral) (1860–1919) என்பவர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வங்க மொழி கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் பிறந்த இடம் கல்கத்தா ஆகும். [3]அவரது குடும்பம் முதலில் ஊக்ளி மாவட்டத்தின் சந்தன்நகரில் வசித்தது.[4]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பரல் 1860 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் உள்ள கல்கத்தாவின் சோர்பகானில் பிறந்தார். அங்குள்ள ஏர் பள்ளியில் சிறிது காலம் பயின்றார். அதன் பின்னர் இவர் தில்லி மற்றும் இலண்டன் வங்கியில் கணக்கு எழுத்தராக பணியாற்றினார். வடக்கு பிரித்தானியப் பேரரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் செயலாளராக பணியாற்றினார்.[5]
தொழில்
[தொகு]கவிஞர் பிகரிலால் சக்ரவர்த்தியின் ரசிகராக இருந்தார். சிசிர் குமார் தாசு பரலின் கவிதைகளை தியானம் மற்றும் சிந்தனைமிக்கவை என்று விவரித்தார்.[6] நாராயணன் சௌதுரியின் கூற்றுப்படி, இவர் இந்திய இலக்கியத்தில் சிறந்த இரங்கற்பாக்களின் எடுத்துக்காட்டுகள் சிலவற்றை எழுதியுள்ளார். [7]
நூல் பட்டியல்
[தொகு]- புரோடிப்பு (1884)
- கனகஞ்சோலி 1885
- சங்க (1910)
- ஈசா (1912)
- வுல்
- சண்டிதாசு (1917)[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ মুছে গেল হীরকের দ্যুতি [The light of the diamond disappeared]. eisamay.com (in Bengali). Kolkata: Ei Samay Newspaper. 11 July 2016. Archived from the original on 30 December 2023. Retrieved 28 November 2023.
- ↑ Mitra, Atanu (12 July 2016). "Amal Dutta (1930—2016): the Indian football coach whom players swore by and swore at". Scroll.in. Kolkata. Archived from the original on 10 October 2022. Retrieved 26 November 2022.
- ↑ Ghosh, Biswajit. "Boral, Akshay Kumar". Banglapedia. Retrieved 6 July 2020.
- ↑ Subarnabanik Katha O Kirti (vol.1), Laha, Narendranath, Calcutta Oriental Press, Calcutta, 1940, p 80
- ↑ মুছে গেল হীরকের দ্যুতি [The light of the diamond disappeared]. eisamay.com (in Bengali). Kolkata: Ei Samay Newspaper. 11 July 2016. Archived from the original on 30 December 2023. Retrieved 28 November 2023.
- ↑ Das, Sisir Kumar (2005). History of Indian Literature: 1911-1956, struggle for freedom : triumph and tragedy (in ஆங்கிலம்). Sahitya Akademi. p. 538. ISBN 978-81-7201-798-9.
- ↑ Datta, Amaresh (1988). Encyclopaedia of Indian Literature: Devraj to Jyoti (in ஆங்கிலம்). Sahitya Akademi. p. 1146. ISBN 978-81-260-1194-0.
- ↑ Akshaykumar Baral (1957). Akshaykumar Baral Granthaboli অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলি.