உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கோரியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்கோரியசு (Acoreus) ஓர் எகிப்திய[1] அறிஞர். இவர் ஜூலியசு சீசருக்கு அறிவுரைஞராக விளங்கியவர். பண்டைய உரோமானிய எழுத்தாளரும் கவிஞருமாகிய உலுக்கானின் கூற்றுப்படி, சீசர் இவரிடம் பண்டைய எகிப்திய வரலாறு, நாட்காட்டி பற்றிப் பல கேள்விகளைக் கேட்டுள்ளார். ஆனால் அக்கோரியசு தனக்கு நைல் பேராற்றின் வெள்ளம் பற்றிய காரணமும் நீர் வரத்தின் வாயில்களைப் பற்றி மட்டுமே தெரியும் எனவும் அதுவும் காள்வியறிவுதான் எனவும் கூறியுள்ளார். எனவே இவர் சீசருக்கு நைல் பேராற்றைப் பற்றியும் வெள்ளம் வரும் பருவம், காரணம், நீர்வரத்து வாயில்களைப் பற்றியும் விவரித்துள்ளார்.

சீசர் அலெக்சாந்திரியா நகரத்து சோசிகெனெசு வழங்கிய சராசரி சூரிய ஆண்டைப் பற்றிய எகிப்திய அறிவைக்கொண்டு தனது நாட்காட்டியை வடிவமைத்துள்ளார்.

மேலும் காண்க

[தொகு]
  • ஜூலிய நாட்காட்டி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lee Fratantuono, Madness Triumphant: A Reading of Lucan's Pharsalia, Lexington Books, 2012, p. 409: "Acoreus, the linen-wearing Egyptian priest".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கோரியசு&oldid=3616332" இலிருந்து மீள்விக்கப்பட்டது